Published : 29 May 2021 06:39 AM
Last Updated : 29 May 2021 06:39 AM
அண்ணலாரின் ஆளுமைகள்
கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் வெளியீடு
விலை: ரூ.175
தொடர்புக்கு: 044 26624401
நபிகளாரின் உபதேசங்கள் அனைத்துக்கும் அவரே முன்னுதாரணமாக இருந்தார். அனைத்து மாற்றங்களும் அவரிடமிருந்தே தொடங்கின. பிறப்பின் அடிப்படையில் பேதம் காட்டுதல், பெண்ணடிமைத்தனம், பழிக்குப் பழி வாங்குதல், வட்டி ஆகியவற்றை ஒழிப்பதற்கான முதலடியை அவரே எடுத்து வைத்தார். நபிகளாரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான தலைப்புகளில் வெளிவந்திருக்கின்றன. கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் எழுதியுள்ள இந்தப் புத்தகமோ நபிகளாரின் ஆளுமைப் பண்புகளைப் பற்றிய எழுதப்பட்ட மிகச் சில நூல்களில் ஒன்று. நபிகளாரின் குணநலன்கள், தலைமைத்துவப் பண்புகள், மனிதநேயப் பண்புகளைத் தொகுத்து வழங்குகிறது இந்நூல். ஒரு தலைவராக அவர் தனது தொண்டர்களை எப்படி நடத்தினார், அடித்தட்டு மக்களிடம் அவர் எப்படி நடந்துகொண்டார் என்பதை விளக்கும் பகுதிகள் தலைமைத்துவத்தை விரும்புபவர்களுக்கு நல்லதோர் வழிகாட்டி. நேரத்தைத் திட்டமிடல், பேச்சிலும் மொழியிலும் கவனம்கொள்ளுதல் முதலான அவரது குணநலன்கள் ஆளுமைப் பண்புகளுக்கான கலங்கரை விளக்கம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT