

கொங்கு நாட்டின் தலைமைத் தலமான பழனியைப் பற்றிய கல்வெட்டு, செப்பேடு, இலக்கியம், சுவடிகள் போன்ற அனைத்து ஆவணங்களையும் ஓரிடத்தில் தொகுத்தால் ஆய்வாளர்கட்கும், சமய, வரலாற்று ஆர்வலர்கட்கும் பயன்படுவதுடன், பொதுமக்களும் பழனியின் பண்டைய பெருமைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று கருதி இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்தொகுப்பில் உள்ள பல கல்வெட்டுகளும் செப்பேடுகளும் முதல்முறையாக இங்கு அச்சிடப்பட்டுள்ளன.
தமிழகக் குறுநில மன்னர்கள், கொங்குப் பட்டக்காரர்கள், பாளையக்காரர்கள், மற்றும் பல சமூகப் பெருமக்கள் ஆகியோர் பழனியில் பல மடங்களையும் சத்திரங்களையும் ஏற்படுத்தியுள்ளனர். அனைத்து அறநிலையங்களும் ஆய்வு செய்யப்படுமாயின் இன்னும் சில செப்பேடு பட்டயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு தேடி ஆவணங்கள் விரிவாகத் தொகுப்பதற்கு இத்தொகுப்பு ஒரு தூண்டுதலாக அமையும்.
பழனி வரலாற்று ஆவணங்கள்
விலை: ரூ. 200
தொகுப்பாசிரியர்: செ. இராசு
வெளியீடு: கொங்கு ஆய்வு மையம்,
ஈரோடு, 638011.
தொலைபேசி: 0424-2258511