Published : 15 May 2021 05:53 AM
Last Updated : 15 May 2021 05:53 AM

நூல்நோக்கு: முறிந்தாலும் வானவில்தான்

‘கவிதை என்பது ரொட்டி மாதிரி; படித்தவர்களும் பாமரர்களும் மகத்தான மானுடக் குடும்பத்தினர் அனைவரும் அப்படைப்பைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என பாப்லோ நெரூதாவின் கருத்தை முன் பக்கத்தில் பதிவிட்டு, அதைத் தொடர்ந்த பக்கங்களில் தொடரும் வசந்தகுமாரனின் கவிதைகள் அந்தக் கூற்றுக்கு சான்று பகிர்கின்றன. ‘ஒரு பறவையை வரைவதற்கு முன்/ ஒரு கூட்டை வரைந்துவிடு/ பாவம் எங்கு போய் அவை தங்கும்’ என்பன போன்ற கவிதைகள் கருணையின் கோப்பையில் தேநீர் அருந்துகின்றன. ‘என்னை வழியில் கண்டால்/ நான் தேடுவதாக/ சொல்லுங்கள்’ என்று எழுதுவதும், ‘முகம் பார்க்கும் நிலைக்கண்ணாடியில்/ எனக்கு எதிரே நிற்கிறான்/ என் முதல் எதிரி’ என்பதும் வசந்தகுமாரனின் அகத் தோரணையைக் காட்டுகின்றன. ‘எல்லோரும்/ என்னைக் கைவிட்ட பிறகு/ என் ஒரு கையால் மறு கையைப்/ பற்றிக்கொண்டு எழுந்துவிட்டேன்’ போன்ற நம்பிக்கைக் கூழாங்கற்களும் புத்தகத்தில் ஆங்காங்கே கரையொதுங்கிக் கிடக்கின்றன.

முறிந்த வானவில்
கோ.வசந்தகுமாரன்
தமிழ் அலை வெளியீடு
தேனாம்பேட்டை, சென்னை-86.
தொடர்புக்கு: 044 24340200
விலை: ரூ.100

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x