Published : 01 May 2021 04:31 AM
Last Updated : 01 May 2021 04:31 AM

பிறமொழி நூலகம்: மனத்தைப் புரிந்துகொள்வோம்

மேஜிக் ஆஃப் மைண்ட்
ரவி வல்லூரி
ஏகேஎஸ் பப்ளிஷிங் ஹவுஸ்
லக்ஷ்மி நகர்,
புது டெல்லி-110092.
விலை: ரூ.199

தெற்கு ரயில்வேயின் முதன்மைத் தலைமை வணிக மேலாளராகச் சமீபத்தில் பதவியேற்றிருக்கும் ரவி வல்லூரிக்கு எழுத்தாளர் முகமும் உண்டு. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ரயில்வே துறையில் பணியாற்றிவரும் இவர், இதுவரை 8 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கரோனா காலகட்டம் எல்லோரையும் மன நெருக்கடியில் தள்ளியிருக்கும் பின்னணியில் மனதைப் புரிந்துகொள்ளும் முயற்சியாக இப்போது வெளியாகியிருக்கிறது ‘மேஜிக் ஆஃப் மைண்ட்’. இவருடைய ஆரம்ப கால மூன்று புத்தகங்களும் மனம் தொடர்பானவையே. இப்போது மீண்டும் அதே புள்ளிக்குத் திரும்பியிருக்கிறார். 50 கட்டுரைகளைக் கொண்டிருக்கும் இந்தப் புத்தகமானது சத்தியத்தின் வழியில் நடப்பதன் முக்கியத்துவத்தையும், ஆன்மிக வழிகாட்டுதலையும், யோகா பயிற்சிகளையும் பேசுகிறது. கரோனா காலகட்ட மன நெருக்கடிகளையும் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. ரவி ஷங்கர், டேவிட் கார்டன் வைட், ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஜோசப் முர்ஃபி, திக் நியட் ஹான் போன்ற ஆளுமைகளின் கருத்துகளை எளிமையாக விவரிக்கும் இந்தப் புத்தகத்திலுள்ள ஜென் கதைகளும் இதிகாசக் கதைகளும் வாசிப்புக்குச் சுவாரஸ்யம் கூட்டுகின்றன.

- ஞானப்பிரகாசம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x