

கானவி, கண்ணன், நுவன், குழந்தை யாழி, ஆச்சி, லட்சுமி என்று மிகச் சில கதாபாத்திரங்களை வைத்து அற்புதமாக எழுதப்பட்டுள்ள நாவல் இது. நிகழ்கால நிஜமும் கடந்த கால வரலாறும் கேள்விகளாகவும் வேதனைகளாகவும் பதிவாகியிருக்கின்றன. கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத் திருத்தலத்தில் ஈஸ்டர் ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடங்கும் கதை, மடு மாதா தேவாலயத்துக்குச் சென்று லட்சுமியைப் பார்த்துவிட்டுக் குழந்தையுடன் கானவி திரும்புவதுடன் முடிகிறது. இடையில் புலிகளின் தகவல் தொடர்புப் பிரிவில் பணிபுரியும் கண்ணனுக்கும் சிங்கள இளைஞன் நுவனுக்கும் கானவி மீது ஏற்படும் காதல் மிகக் கண்ணியமாக எழுதப்பட்டுள்ளது. கண்ணனுடனான தொடர்பால் கருக்கலைப்பு வரை செல்லும் கானவி, தன்னைப் போல இள வயதில் தாய்மையடைந்த இரு தலைமுறைகளின் தொடர்ச்சியான யாழியை வளர்ப்பு மகளாக ஏற்பதுடன் முடிகிறது. இதற்கிடையில் ஏற்படும் மனப் போராட்டங்கள், வாழ முடியாத ஆனால் வாழ்ந்தாக வேண்டிய வாழ்க்கைத் துயரங்கள் நுட்பமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
கொச்சிக்கட vs கும்மிடிபூண்டி
ஈழவாணி
பூவரசி பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு:
044 4860 4455