Published : 17 Apr 2021 05:44 AM
Last Updated : 17 Apr 2021 05:44 AM

நூல்நோக்கு: சக மனிதர்களின் அகத்தை மொழிதல்

ஜீவன் பென்னி

தன்னைச் சுற்றியிருக்கும் உலகின் பலதரப்பட்ட மனிதர்களின் குணங்களிலிருந்தும், ஊடாடும் தொடர் காட்சிகளிலிருந்தும் தருணங்களைத் தனியாகத் தேடியெடுத்துச் சொல்லப்பட்டிருக்கும் சிறுகதைகளின் தொகுப்பு இது. நிகழ்வுகளின் வழியே நகர்ந்திடும் கதாபாத்திரங்களின் சகலவிதமான குணாதிசயங்களிலும் நுழைந்து அவர்களின் மன அடுக்குகளின் தன்மைகளை நுட்பமாகப் பதிவுசெய்திடும் புனைவின் வசீகரத்தை இந்தக் கதைகள் கொண்டிருக்கின்றன. கதைகள் நிகழ்ந்திடும் நிலத்தின் பின்னணியில் அரசியல், தத்துவம், பொருளாதாரம், மனப்பிறழ்வு ஆகியவை சார்ந்த உரையாடல்கள் வாசகர்களோடும் விவாதம் புரிகின்றன. தனிமனித அகம் எவ்வளவோ அனுபவங்களை அனுதினமும் பெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த அனுபவங்கள் தரும் வெவ்வேறு சாத்தியங்கள் பெரிய தத்துவங்களோடும் கோட்பாடுகளோடும் இணைந்திடவே முடியாத புள்ளியைத் தொட்டுக்காட்டுவது இந்நூலின் தனித்துவம் எனலாம். பெரும் தேடலுக்குப் பிறகு வெட்டவெளியாகி நின்றுவிடும் மனதின் அமைதியை இந்தக் கதைகள் நெகிழ்ச்சியுடன் உணர்த்துகின்றன.

முறையிட ஒரு கடவுள்
சர்வோத்தமன் சடகோபன்
மணல்வீடு பதிப்பகம்
ஏர்வாடி,
சேலம்-636453.
தொடர்புக்கு:
98946 05371
விலை: ரூ.150

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x