புத்தக அறிமுகம்: நேசிக்கச் சொல்லும் ஓஷோ

புத்தக அறிமுகம்: நேசிக்கச் சொல்லும் ஓஷோ
Updated on
1 min read

மதத்தின் பெயரால் சகிப்புத்தன்மையற்ற கருத்துகளும் நடவடிக்கைகளும் பரவிவரும் காலகட்டம் இது. இந்தச் சூழ்நிலையில் மதம் என்பது நேசத்துக்கான சாதனம் என்று பேசும் ஓஷோவின் குரல் மிகவும் தேவையானது. வாழ்க்கையை மகிழ்ந்து கொண்டாடவே மதம் சொல்கிறது என்று ஜென் தத்துவம் வழியாக ஓஷோ இந்த நூலில் அழகாக விளக்குகிறார்.

மதம் ஒரு தத்துவம் அல்ல, தர்ம சாஸ்திரங்கள் அல்ல, மதம் என்பது உயிர் உணர்வின் மலர்ச்சியாக இருக்கும் கவிதை போன்றது என்கிறார் ஓஷோ. உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதில்லை, உண்மை என்பது ஏற்கெனவே இங்கிருக்கிறது என்கிறார். சிரிப்பே ஜென்னின் சாராம்சம் என்கிறார் ஓஷோ. ஜென் கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், கேள்வி பதில்கள் வாயிலாக நமது வரையறுக்கப்பட்ட சமூக, கலாச்சார நடத்தைகள் மற்றும் நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்குகிறார். நமது இயல்பான ஆனந்தத்துக்குத் தடையாக அவை இருக்கின்றன என்பதையும சுட்டிக்காட்டுகிறார்.

நமது ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுப்பும் இடியோசையாக இருக்கிறது ஓஷோவின் இப்புத்தகம்.

திடீர் இடியோசை ஓஷோ
தமிழாக்கம்: சுவாமி சியாமானந்த்
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர்,
சென்னை-17 தொடர்புக்கு: 24332682
விலை: ரூ.260/-

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in