

இந்த நூல் தன்வரலாறு போன்ற உணர்வைத் தருகிறது. மன விளையாட்டுக்களின் மீதான உயிர்ப்பான அனுபவங்கள், அதி இயற்கையின் மீதான முயற்சி இவற்றின் பக்கமாய் இருக்கிறது. உண்மையில் கோபேயிலிருந்து டோக்கியோவுக்கு இளம் வயது ஹாருகி முரகாமி முதன்முறையாக வந்தபோது வாழ்க்கை எப்படி இருந்ததென, அவரின் பிற நாவல்களை விடவும் இது பெரிதும் நேரடியாகச் சொல்கிறது…
இதில் நிறைய புனைவு இருக்கிறது., மேலும் நிறைய நையாண்டி மற்றும் நகைச்சுவை, முரகாமியின் வழக்கமான வாசகர்கள் உடனே கண்டுகொள்ளும் குறியீடுகள் அதிகம் இருக்கின்றன. இது எவ்விதத்திலும் வெறும் காதல் கதையல்ல.
- இந்த ஜப்பானிய நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ஜே. ரூபின் எழுதிய முன்னுரையிலிருந்து…
நோர்வீஜியன் வுட், ஹாருகி முரகாமி
தமிழில்: க. சுப்பிரமணியன், விலை: ரூ. 350
வெளியீடு: எதிர் வெளியீடு, பொள்ளாச்சி-02
தொலைபேசி: 04259-226012, 98650 05084
மின்னஞ்சல்: ethirveliyedu.in@gmail.com