கணினியும் தமிழும்

கணினியும் தமிழும்
Updated on
1 min read

கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்து வெவ்வேறு சூழலில் எழுதப்பட்ட ஐந்து கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கணினியில் தமிழ் என்னும் கட்டுரை கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்குரிய முறைகள், உள்ளீடு செய்வதில் எழும் சிக்கல்கள் இவற்றை விளக்குகிறது.

கணினியில் தமிழை உள்ளீடு செய்யப் பல இலவச இடை முக மென்பொருள்கள் வந்துள்ளன. இவற்றைப் பயன்படுத்த விரும்பு வோருக்கு உதவும் வகையில் ஒவ்வொரு மென்பொருளின் தனித்தன்மையையும் விரிவாக எடுத்துரைக்கிறது ஒரு கட்டுரை. வணிகநோக்கமின்றி நிரல் குறிகளைப் பதிவிறக்கம் செய்தல், அவற்றை மதிப்பிடுதல் எதிர்காலத் தேவையை இனங்காட்டுதல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட தாக நூலின் நான்காம் கட்டுரை அமைந்துள்ளது.

தரவகம்(Corpus) என்னும் கட்டுரை மொழி ஆய்வு, அகராதி ஆக்கம், மென்பொருள் தயாரிப்பு, மொழி கற்க கற்பிக்க எனப் பல்வேறு பயன்பாட்டிற்கு உதவும் தரவகம் குறித்த கருத்துகளை விளக்குகிறது. மேலும், தமிழ் மொழிக்குப் பெருந்தரவகம் உருவாக்க வேண்டிய தேவையையும் இது முன்வைத்துள்ளது. கணினியின் பல்வேறு பரிமாணங்களையும் விளக்கும் இந்நூல் அதன் தலைப்போடு மிகப் பொருத்தம் உடையதாக அமைகிறது. எளிய நடையில் கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை விளக்கும் விதத்தில் இந்நூலை நூலாசிரியர் அமைத்துள்ள பாங்கு பாராட்டத்தகுந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in