

குடும்பத்துக்குள்ளேயே ஜனநாயகத் தைப் பொறுத்தவரை எவ்வளவு பிரச்சினைகள்! நாட்டு நிர்வாகமும் குடும்ப நிர்வாகம் போன்று தான். காஷ்மீரில் மக்கள் ராணுவத்துக்கு எதிராகக் கல்லெறியும் போராட்டம் நடத்தினார்கள் என கேள்விப்படும்போது ராணுவத்துக்கும் மக்களுக்குமான பரஸ்பர நம்பிக்கையைப் பற்றிய சந்தேகம் நமக்கெல்லாம் ஏற்பட்டது. பத்திரிகையாளர் கவுதம் நவ்லாகா காஷ்மீரின் உள்ளே நடப்பவற்றை நமக்கு வெளிப்படுத்துகிறார்.
ஒரு குடும்ப ஜனநாயகத்தின் அம்சங்களாக அந்த நிகழ்வுகள் இல்லை. கட்டாயப்படுத்துவதன் மூலம் அன்பைப் பெற முடியாது. குற்றங்களுக்கு நீதி கிடைக்காமல் பாதுகாப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் முடியாது என்பதையும் காஷ்மீர் சகோதரர்களின் துன்பங்களையும் புரிந்துகொள்ள வைக்கும் நூல்.
- த. நீதிராஜன்
காஷ்மீர்: அமைதியின் வன்முறை
கவுதம் நவ்லாகா
தமிழில்: வெண்மணி அரிதரன்
விலை: ரூ.25
விடியல் பதிப்பகம்
கோயம்புத்தூர்: 641 015
தொடர்புக்கு: 9443468758,
மின்னஞ்சல்: vidiyal@vidiyalpathippagam.org