Published : 10 Mar 2021 07:37 PM
Last Updated : 10 Mar 2021 07:37 PM

தினம் ஒரு புத்தக வெளியீடு: விர்ச்சுவலாக 14 புத்தகங்களை வெளியிட்ட காம்கேர் புவனேஸ்வரி

சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தைக் கடந்த 28 ஆண்டுகளாக நடத்தி வரும் காம்கேர் கே.புவனேஸ்வரி 2021 புத்தகக் காட்சியை முன்னிட்டு, தினம் ஒரு புத்தக வெளியீடு என்ற தலைப்பில் விர்ச்சுவலாக 14 புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

2021 புத்தகக் காட்சியில் இவர் அறிமுகப்படுத்தியுள்ள திட்டம் குறித்து உற்சாகத்துடன் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

''பொதுவாக நிகழ்ச்சி என்றால் மேடை இருக்கும். பேச்சாளர்கள், பார்வையாளர்கள் இருப்பார்கள். நிகழ்ச்சி நடைபெறும் நாள் அன்று அந்தக் குறிப்பிட்ட தினத்தில் எத்தனை பார்வையாளர்கள் வருகிறார்களோ அவர்கள் மட்டுமே அந்த நிகழ்ச்சியைப் பார்வையிட முடியும். அதன் டிஜிட்டல் வெர்ஷனை யூடியூப் சேனல்களிலும், சமூக வலைதளங்களிலும் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். நேரடியாகக் கலந்துகொள்வது என்பது அனைவருக்கும் சாத்தியமில்லாத ஒன்று.

ஆனால், நான் அறிமுகப்படுத்தியுள்ள ‘தினம் ஒரு புத்தக வெளியீடு!’ என்ற விர்ச்சுல் நிகழ்ச்சியில் காம்கேர் டிவியும், சமூக வலைதளங்களுமே நிகழ்ச்சியின் மேடை. ஆன்லைனில் தொடர்பில் உள்ள அனைவருமே பார்வையாளர்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.

இந்த வருடம் நடைபெற்ற புத்தகக் காட்சியை முன்னிட்டு தினம் ஒரு புத்தக வெளியீடு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினேன். இதன் நோக்கம் 2021 புத்தகக் காட்சி நடைபெறும் 14 நாட்களும் (பிப்ரவரி 24, 2021 முதல் மார்ச் 9, 2021 வரை) தினமும் ஒரு நூலை அமேசானில் வெளியிடுவது. நான் எழுதி எங்கள் காம்கேர் நிறுவன வெளியீடாக, 14 நூல்கள் 14 நாட்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கவும், அறிமுகப்படுத்தவும் சில சிறப்பு விருந்தினர்களை அழைத்திருந்தேன். அவர்கள் ஏதேனும் ஒரு விதத்தில் எங்கள் காம்கேர் நிறுவனத்துக்கும், இந்த நிகழ்ச்சியில் வெளியிட்ட புத்தகங்களுடனும் தொடர்புடையவர்கள்.

அவர்கள் தங்களின் வசதிக்கேற்ப ஏதேனும் ஒரு நேரத்தில் வருகை தந்து, தங்கள் கருத்துகளை எழுத்து வடிவிலோ அல்லது வீடியோவாகவோ அல்லது இரண்டிலுமோ பதிவு செய்வார்கள். அவற்றை என் ஃபேஸ்புக் பக்கத்தில் உடனுக்குடன் பகிர்கிறேன். எங்கள் காம்கேர் டிவி - யூடியூப் சேனலில் ஒளிபரப்புகிறேன்''.

இவ்வாறு புவனேஸ்வரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x