

அன்றாட வாழ்வில் மிக எளிதாகக் கடந்து போகும் தருணங்களை மீட்டெடுத்துத் தனது கதைகளில் நிரப்பிவிடுபவர் வாஸந்தி. வாசித்து முடித்த பின்னர் அது வாசகருக்கான அனுபவமாகவும் மாறி நிற்கும் என்பதே அவரது எழுத்தின் பலம். வாசிப்பு சுகத்துக்கானவை மட்டுமல்ல வாஸந்தியின் கதைகள், அவை வாழ்வைச் சொல்பவை; வாழ்ந்ததைச் சொல்பவை; மொத்தத்தில் வாழ்க்கையைச் சொல்பவை. வாஸந்தியின் எழுத்துகளில் பெண்களின் உலகம் முழக்கங்களின்றி ஆனால் வலுவாக மலர்ந்து நிற்கிறது. இந்த முத்துக்கள் பத்து தொகுப்பிலும் அதே விதமான கதைகள் நிரம்பியுள்ளன. முதல் கதையான ‘சட்டம் ஒழுங்கு பிரச்சினை’யில் தொடங்கினால் இறுதிக் கதையான காட்டுச் சாப்பாடு வரை தட்டுத் தடங்கலின்றிச் சென்றுவிடலாம் என்பது நிச்சயம்.
- ரிஷி
முத்துக்கள் பத்து
வாஸந்தி
விலை ரூ.130
வெளியீடு: அம்ருதா பதிப்பகம்
சென்னை 600035
தொலைபேசி: 044-24353555