Published : 06 Mar 2021 02:50 PM
Last Updated : 06 Mar 2021 02:50 PM
தென்னாட்டுப் போர்க்களங்கள் வீழ்ச்சியும் மாட்சியும்
கா.அப்பாத்துரை
அழகு பதிப்பக வெளியீடு
விலை: ரூ.500
9444191256
தமிழ் இலக்கியம் தமிழர்களின் அகவாழ்வை மட்டும் பதிவுசெய்யவில்லை, புறவாழ்க்கையையும் பதிவுசெய்திருக்கிறது. சங்க இலக்கியத்தில் தொடங்கி இடைக்கால, பிற்கால இலக்கியங்களெல்லாம் தமிழ்ப் பேரரசர்கள், சிற்றரசர்கள், குறுநில மன்னர்கள் போன்றோர் நிகழ்த்திய போர்களைப் பதிவுசெய்திருக்கின்றன. கூடவே, ஏராளமான கல்வெட்டுச் சான்றுகளும் உண்டு. இப்படி, இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுச் சான்றுகள் போன்றவற்றைக் கொண்டு, தமிழ்நாட்டில் நிகழ்ந்த போர்களைப் பற்றிய வரலாற்றைப் பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் விரிவாக எழுதியிருக்கிறார். தென்னகம் தாண்டியும் தமிழ் மன்னர்கள் நிகழ்த்திய படையெடுப்புகள், போர்கள் குறித்த தகவல்கள் இந்நூலில் உண்டு. தமிழர் வரலாறு பற்றி அறிந்துகொள்ள ஆர்வமுடையோர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT