

ஆற்றல் மிக்க பேச்சாளர், பொதுவுடமைச் சிந்தனையாளர், பத்திரிகையாளர், ஆங்கிலப் பேராசிரியர், வழக்கறிஞர், தலைசிறந்த நாடாளுமன்றவியர், மொழிபெயர்ப்பாளர் போன்ற பன்முக அடையாளங்களைக் கொண்ட தா.பாண்டியன், நிறைய நூல்களும் எழுதியிருக்கிறார். ‘ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள்’, ‘பாரதியும் சாதி ஒழிப்பும்’, ‘இயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை’, ‘படுகுழிக்குள் பாரததேவி’, ‘மதமா அரசியலா?’, ‘காலச்சக்கரம் சுழல்கிறது’, ‘ஜீவாவும் நானும்’, ‘தெய்வத்திற்கு என்ன வேலை?’, ‘பிடல் காஸ்ட்ரோ’, ‘நெல்சன் மண்டேலா’, ‘சேகுவேரா’, ‘பாரதியும் யுகப்புரட்சியும்’, ‘ஒரு லாரி டிரைவரின் கதை’, ‘விழி திறந்தது வழி பிறந்தது’, ‘ரத்தப் பொட்டும் ரப்பர் அழிப்பும்’, ‘சோக வரலாற்றின் வீர காவியம்’, ‘பொதுவுடமையரின் வருங்காலம்’, ‘பெரியார் எனும் இயக்கம்’, ‘வரலாற்றுப் பொருள்முதல்வாதம்’, ‘கல்லும் கதை சொல்லும்’, ‘மார்க்சிய சிந்தனைச் சுருக்கம்’, ‘என் முதல் ஆசிரியர்’, ‘நிலமென்னும் நல்லாள்’, ‘மேடைப் பேச்சு’, ‘கம்பனின் அரசியல் கூட்டணி’, ‘திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்’, ‘சமுதாயமும் தனிநபரும்’, ‘இந்தியாவில் மதம்’, ‘கொரோனாவா முதலாளித்துவமா?’ உள்ளிட்ட அவரது நூல்கள் சென்னைப் புத்தகக்காட்சியில் என்சிபிஹெச் அரங்கு F18-ல் கிடைக்கும்.