

சென்னைப் புத்தகக்காட்சியையொட்டி, 1950-60-களில் மேதாவி, பி.டி.சாமி, சிரஞ்சீவி, பிரேமா சரஸ்வதி, மனோகரன் எழுதிய 34 துப்பறியும் மர்ம நாவல்களைக் கொண்டுவந்தது ‘பிரேமா பிரசுரம்’. சுமார் 5,700 பக்கங்களுக்கு வெளியான இந்த நாவல் தொகுப்புக்குப் புத்தகக்காட்சியில் நல்ல வரவேற்பாம். தங்கள் சிறு பிராய நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாக வாசகர்கள் அள்ளிச் செல்கிறார்கள்!