Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

பதிப்பாளரின் படைப்புமுகம்

பொதுமுடக்கக் காலத்தில் வாசிப்பை ஒரு இயக்கமாக முன்னெடுத்தது ‘வாருங்கள் படிப்போம்’ வாட்ஸ்அப் குழு. வாரம்தோறும் இணையவழியில் இக்குழு நடத்திய புத்தகத் திறனாய்வுக் கூட்டங்களில் தமிழில் வெளிவந்த முக்கியமான நூல்கள் பலவும் விவாதிக்கப்பட்டன. சென்னை எஸ்டிஎன்பி வைஷ்ணவ் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் பெ.உமா மகேஸ்வரி ஒருங்கிணைப்பிலும் பதிப்பாளர் கோ.ஒளிவண்ணனின் வழிகாட்டுதலிலும் இக்கூட்டங்கள் நடந்தன. பதிப்பாளர், புத்தக விமர்சகர் என்று அறியப்பட்ட கோ.ஒளிவண்ணன், பொதுமுடக்கக் காலத்தில் படைப்பிலக்கிய முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். கடந்த சில மாதங்களில் அவர் எழுதிய 15 சிறுகதைகள் அவரது ‘எழிலினி’ பதிப்பகத்தின் வெளியீடாக இந்தப் புத்தகக்காட்சிக்கு வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x