Published : 01 Nov 2015 12:20 PM
Last Updated : 01 Nov 2015 12:20 PM

விடுபூக்கள்: சென்னைப் பிரகடனம்

மதவெறி அரசியலுக்கு எதிராகத் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் ஒன்று கூடி ஒரு பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர். தாத்ரி சம்பவம், எழுத்தாளர்கள் கொல்லப்படும் அவலம் இவற்றுக்கு எதிராகக் கண்டனத்தைப் பதிவுசெய்யும் வகையில் கடந்த 28.10.15 அன்று இந்த நிகழ்ச்சியை சரிநிகர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, ஓவியா, மனுஷ்ய புத்திரன், அருணன், ஞாநி, தமிழ்ச்செல்வன், ரவிக்குமார், அ.மார்க்ஸ், திலகவதி உள்ளிட்ட எழுத்தாளர்கள் பலர் இந்த நிகழ்வின் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்புகளைப் பதிவுசெய்தனர்.

சல்மான் ருஷ்டியின் புதிய நாவல்

பிரபல ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் புதிய நாவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. `Two Years Eight Months and Twenty-Eight Nights' (இரண்டு வருடங்கள், எட்டு மாதங்கள் மற்றும் இருபத்தி எட்டு இரவுகள்) என்ற தலைப்பில் அமைந்திருக்கும் அந்த நாவல், நவீன `ஆயிரத்தோரு இரவு அரேபியக் கதைகளாக உள்ளது' என்று கூறப்படுகிறது. இந்த நாவலின் தலைப்பில் உள்ளபடி, கணக்கிட்டால் மிகச் சரியாக 1,001 இரவுகள் வருவது குறிப்பிடத்தக்கது. யாருமே எதிர்பார்க்காத நாளொன்றில் ஆழிப்பேரலை உருவாகி, நியூயார்க் நகரத்தை அழித்துவிடுகிறது. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதான் கதை. `நான் எழுதியதிலேயே மிகவும் வேடிக்கையான நாவல் இதுவாகத்தான் இருக்கும்' என்கிறார் ருஷ்டி.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x