Published : 20 Feb 2021 08:37 AM
Last Updated : 20 Feb 2021 08:37 AM

பிறமொழி நூலகம்: ஆங்கிலத்தில் ஜெயகாந்தனோடு பல்லாண்டு

தயாளன்

மெனி இயர்ஸ் வித் ஜெயகாந்தன்
பி.ச.குப்புசாமி
ஆங்கிலத்தில் கே.ஸ்ரீகிருஷ்ணன்
கவிதா பப்ளிகேஷன்
தொடர்புக்கு:
044 – 2436 4243
விலை: ரூ.300

தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான முகங்கொண்ட ஜெயகாந்தனுடன் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நட்பு பாராட்டியவர் பி.ச.குப்புசாமி. ஜெயகாந்தனுடனான தன்னுடைய அனுபவங்களை ‘ஜெயகாந்தனோடு பல்லாண்டு’ எனும் தலைப்பில் 40 வாரங்களுக்கும் மேலாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் தொடராக எழுதினார். அதில் முதல் பாதி தொடர் வந்துகொண்டிருந்த காலகட்டத்தில், ஜெயகாந்தன் உயிருடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், ஜெயகாந்தன் குறித்த துல்லியமான தரவுகளுடன் எழுதப்பட்ட தொடர் அது எனலாம்.

‘இந்து தமிழ்’ வெளியீடாக அந்தத் தொடர் புத்தக வடிவம் பெற்றபோது, பரவலான கவனம் பெற்றது. இப்போது அதை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கிறார் கே.ஸ்ரீகிருஷ்ணன். ஜெயகாந்தனின் அபூர்வமான புகைப்படங்களோடு இப்புத்தகம் வெளியாகியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x