

உலக அளவிலும் இந்திய அளவிலும் இஸ்லாமியர் குறிவைத்துக் கட்டம் கட்டப்படுவதன் விளைவாகவும் கணிசமான அளவில் அந்தச் சமுதாய மக்கள் மற்ற சமுதாயத்தினரிடமிருந்து அந்நியப்பட்டு, தங்களைச் சுற்றிலும் சுவரெழுப்பிக் கொள்வது நிகழ்கிறது.
இது மேலும் ஆபத்தை அந்த சமூகத்துக்கு விளைவிக்கிறது. இப்படி நிகழ வேண்டும் என்பதுதான் இஸ்லாமிய மக்களைக் குறிவைப்பவர்களின் எதிர்பார்ப்பும். இந்த அபாயச் சூழலிலிருந்து இஸ்லாமிய மக்களை விடுவிக்கும் வண்ணம் அந்தச் சமுதாயத்திலிருந்தே எழும் சில எச்சரிக்கைக் குரல்கள் மிகவும் முக்கியமானவை. எச். பீர்முஹம்மதுவின் குரல் அப்படிப்பட்ட குரல். இந்துத்துவத்தை எதிர்க்கும் அதே வேளையில் ஆரோக்கியமான சுயசமய விமர்சனமும் அவரிடம் வலுவாக இருக்கிறது. அவரது நடுநிலைப் பார்வைக்கு அடிப்படையாக அவருடைய சுதந்திரச் சிந்தனை மனப்பான்மை இருப்பதை இந்தக் கட்டுரைத் தொகுப்பிலிருந்து உணர்ந்துகொள்ள முடிகிறது.
- தம்பி
நீண்ட சுவர்களின் வெளியே
எச். பீர்முஹம்மது
விலை: ரூ. 180
வெளியீடு: உயிர்மை பதிப்பகம், சென்னை-600 018
தொலைபேசி: 044-24993448, மின்னஞ்சல்: uyirmmai@gmail.com