

தஞ்சை ப்ரகாஷின் ஸஹ்ருதயர்களில் ஒருவரான செல்லத்துரை புதிதாகத் தொடங்கியிருக்கும் தனது ‘நந்தி’ பதிப்பகத்தின் வாயிலாக, ப்ரகாஷ் எழுதி இதுவரை வெளிவராத நான்கு நூல்களையும் அவரது வாழ்க்கைக் குறிப்புகளையும் வெளியிட்டுள்ளார். ப்ரகாஷின் வெளிவராத சிறுகதைகள் ‘புரவி ஆட்டம்’ என்ற தலைப்பிலும், அவரது மொழிபெயர்ப்புகள் ‘ஞாபகார்த்தம்’, ‘டிராய் நகரப் போர்’ ஆகிய தலைப்புகளிலும் தொகுக்கப்பட்டுள்ளன. ப்ரகாஷின் கட்டுரைகள், நேர்காணல்களைத் தனி நூலாகத் தொகுத்துள்ள மங்கையர்க்கரசி ப்ரகாஷ், அவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை ‘ஒரே தரம்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா இன்று (பிப்ரவரி 13) மாலை தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் நடைபெறுகிறது.
புத்தகக்காட்சி
மக்கள் வாசிப்பு இயக்கம் & ஏசியன் புக்ஸ் இணைந்து நடத்தும் சென்னை வேளச்சேரி புத்தகக்காட்சி.
நாள்: பிப்ரவரி 10 முதல் 21 வரை.
இடம்: புதிய எண்.225 தண்டீஸ்வரம் நகர்.
வேளச்சேரி மெயின் ரோடு, சென்னை.
நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை
இந்தப் புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’ நூல்கள் அனைத்தும் கிடைக்கும்.
தொடர்புக்கு: 9042189635
சொல்வயல் மின்னிதழ்
செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வெளியீடாக ‘சொல்வயல்’ எனும் மாத இதழ் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கிறது. மின்னிதழாக வெளிவரும் இந்த இதழை, சொற்குவை (https://www.sorkuvai.com/) இணையதளத்தில் கட்டணமில்லாமல் வாசிக்கலாம். துறை சார்ந்த கலைச் சொற்கள், தமிழ் தொடர்பான நிகழ்வுகளின் செய்திகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், அகராதியியல் சார்ந்த கட்டுரைகள், சொல்லாய்வுகள், சொல்லாக்க உத்திகள் என சுவாரஸ்யமான உள்ளடக்கத்தோடு இந்த இதழ் வந்துகொண்டிருக்கிறது.