

நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 18 வயதுக்கும் குறைவானோர் ஏறக்குறைய 30% இருக்கும் நிலையில், அவர்களின் வாழ்க்கை குற்றச்செயல்கள் தொடர்பில் பாதிக்கப்படாமலும் அவர்களுக்கு எதிராகக் குற்றச்செயல்கள் நடக்காமலும் பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதற்கான ஒரு சட்டரீதியான கருவிதான் இளைஞர் நீதிச் (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015. இந்தச் சட்டம் குறித்த எளிமையான அறிமுகமாக அமைந்துள்ள இந்த மின்னூலானது, குழந்தைப் பாதுகாப்புடன் தொடர்புடைய குழந்தைகள் நலக் குழுக்கள், இளைஞர் நீதிக் குழுக்கள், நன்னடத்தை அலுவலர்கள், வழக்கறிஞர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது. ஐநா சபையின் குழந்தைகள் உரிமைச் சாசனம், முன்பு நடைமுறையில் இருந்த இளைஞர் நீதிச் சட்டங்கள், அவற்றின் போதாமைகள், இளைஞர் நீதிச் சட்டத்தின்படி அளிக்கப்பட்ட முக்கியத் தீர்ப்புகள், தற்போதைய சட்டத்துக்கும் எதார்த்தத்துக்குமான இடைவெளிகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுவதோடு, இந்தச் சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் வழங்குகிறது இந்தக் கையேடு. இந்தியக் குழந்தைகள் நலச் சங்கத்தின் தமிழ்நாடு கிளையானது, யுனிசெஃப் மற்றும் தமிழ்நாடு அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து வெளியிட்டுள்ள இந்தக் கையேடு இலவச மின்னூலாக விநியோகிக்கப்படுகிறது.
இளஞ்சிறார் நீதிச் சட்டமும் குழந்தைப் பாதுகாப்பும்
இந்தியக் குழந்தைகள் நலச் சங்க வெளியீடு
தொடர்புக்கு: iccwtn@gmail.com