Published : 23 Jan 2021 08:07 AM
Last Updated : 23 Jan 2021 08:07 AM

நூல்நோக்கு: இசை எனும் நீர்

இசை எனும் நீர்

நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்
ரவிசுப்பிரமணியன்
போதிவனம் பதிப்பகம்
ராயப்பேட்டை, சென்னை-14.
விலை: ரூ.150
தொடர்புக்கு:
98414 50437

நல்லவற்றை அடையாளம் காணுதல் ஒரு கலை. தனக்கானதைக் கண்டடைந்து, அதைத் தன்னுணர்வாக மாற்றி பாடுபொருளின் பன்முகத்தன்மையை நம் பயணிப்புக்கு ஏதுவாக மாற்றம்கொள்ளவும் செய்திடுகிறார் கவிஞர் ரவிசுப்பிரமணியன். அன்றாடங்களில் நிகழும் சம்பவங்களில் கவிதைக்கான விதையைத் தேர்வுசெய்தல், திறம்பட மொழியில் பிணைத்தல், இசை எனும் நீரால் ஈரப்படுத்துதல் எனும் தொடர் செயல்பாடுகளால் தன் படைப்புகளுக்கு முழுமை தருகிறார் ரவிசுப்பிரமணியன். இயல்பில் அவர் பாடகராக இருப்பது அவரின் கவிதைகளுக்குக் கூடுதல் பலமாக இருப்பதை வாசிப்பில் உணர முடிகிறது. ‘நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்' கவிதைத் தொகுப்பு இதற்கு மேலும் ஒரு சான்றாக இருக்கிறது.

- ந.பெரியசாமி

************************************

வரலாற்றாசிரியரின் வரலாறு

மொழிபெயர்ப்பு நூல்கள், கட்டுரைகள் வழியாக ஏற்கெனவே தமிழுக்கு அறிமுகமாகியிருப்பவர் வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர். அவரது வாழ்க்கை வரலாற்றையும் வரலாற்றுக்கு அவர் செய்திருக்கும் பங்களிப்பையும் பற்றித் தெளிவாகவும் சுருக்கமாகவும் மருதன் எழுதியுள்ள நூல்தான் ‘ரொமிலா தாப்பர் ஓர் எளிய அறிமுகம்’. ரொமிலா தாப்பர் சிறு வயதில் காந்தியைச் சந்தித்தது, நேருவைச் சந்தித்தது போன்றவை குறித்தெல்லாம் மருதன் சுவைபட எழுதியிருக்கிறார். சம காலத்தில் மிகவும் கொண்டாடப்பட்ட, விமர்சிக்கப்பட்ட ஒரு வரலாற்று ஆளுமையைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு அவசியம் படிக்க வேண்டிய நூல். இது கிண்டிலில் மட்டுமே வெளியாகியிருக்கிறது.

ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்,
மருதன்
கிழக்குப் பதிப்பகம்
விலை: ரூ.50

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x