இப்போது படிப்பதும் எழுதுவதும்: மதுக்கூர் இராமலிங்கம், கவிஞர்/பேச்சாளர்

இப்போது படிப்பதும் எழுதுவதும்: மதுக்கூர் இராமலிங்கம், கவிஞர்/பேச்சாளர்
Updated on
1 min read

‘செம்மலர்’ மாத ஏட்டில் கடந்த 50 மாதங்களுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கும் என்னுடைய கடைசிப் பக்க வார்த்தைகளைத் தொகுத்து ‘கையில் ஓடும் நதி’ எனும் தலைப்பில் வெளியிடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளேன். சமகால சமூக நிகழ்வுகளின் பின்னணியில், பால்யத்தைப் பிசைந்து எழுதப்பட்ட நடைச்சித்திரங்கள் இவை. இவை கதைகளுமல்ல, கட்டுரைகளுமல்ல. ஏற்கெனவே வகுத்து வைத்திருக்கிற வடிவங்களுக்குள் போய் அமர்ந்துகொள்ள வாழ்க்கை ஒன்றும் பள்ளிக்கூடப் பிள்ளையல்லவே?

கவிஞர் ப. சதீஷ் பிரபு எழுதிய ‘சாக்கி’ கவிதை நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். ‘சாட்சி’ என்பதை தஞ்சாவூர் பக்கம் ‘சாக்கி’ என்பார்கள். தன்னுடைய முதல் கவிதை நூலுக்கு ‘பீச்சாங்கை’ என்று பெயரிட்ட இவர் ‘மலம் அள்ளும்/ துப்புரவுத் தொழிலாளிக்கு/ எந்தக் கை பீச்சாங்கை’ என்று கேட்டது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ‘சாக்கி’ தொகுதியில் ஒரு பாலியல் தொழிலாளி கேட்கிறார் ‘காதலில்லாத/ முத்தம் பெறுவதைவிட/ உலகில் வேறொன்றும் / பெரிய தண்டனையில்லை.’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in