நம் வெளியீடு: அறிவே சிவம்

நம் வெளியீடு: அறிவே சிவம்
Updated on
1 min read

உயிர் வளர்க்கும் திருமந்திரம் – 2
கரு.ஆறுமுகத்தமிழன்
இந்து தமிழ் திசை வெளியீடு
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
தொடர்புக்கு:
74012 96562
விலை: ரூ.225

திருமந்திரம் திருமுறைகளில் வரிசைப்படுத்தப்பட்டாலும் அது முன்னிறுத்துவது மெய்யியல் விசாரணையைத்தான். உலகின் தோற்றத்தை, அதன் இயக்கத்தை, உயிரை, உடலை, உணர்வை விரிவாகப் பேசும் திருமந்திரம் சைவ சித்தாந்தத்துக்கு மட்டுமல்ல; தமிழ் சித்தர் மரபுக்கும் மூல நூல். ‘ஆனந்தஜோதி’ இணைப்பிதழில் வாரந்தோறும் இலக்கியமும் மெய்யியலும் பின்னிப் பிணைந்த தனிநடையில் கரு.ஆறுமுகத்தமிழன் எழுதி புத்தகமாக வெளியான முதல் தொகுப்பானது வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது இரண்டாம் பாகம் வந்திருக்கிறது. யோக முறைகள் தொடங்கி துமிகளின் இயற்பியல் (particle physics) வரை எளிமையும் கவித்துவமும் கொண்ட நடையோடு ஆராயும் இந்நூல், பொருள்சார் வாழ்க்கைக்கு அப்பால் கேள்விகளையும் தேடலையும் தொடங்கும் எந்தச் சமயத்தவருக்கும், உண்மையை நோக்கிப் பயணப்பட ஆசைப்படும் எவருக்கும் கைவிளக்காகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in