Published : 05 Dec 2020 07:29 AM
Last Updated : 05 Dec 2020 07:29 AM

நூல்நோக்கு: இருப்பை விதைக்கும் சொற்கள்

பல முகங்கள் கொண்ட கதைகள்

ஒளி, சுசித்ரா
யாவரும் வெளியீடு
தொடர்புக்கு: 90424 61472
விலை: ரூ.180

சுவிட்ஸர்லாந்தில் ஆய்வுப் பணி நிமித்தமாக வசிக்கும், மதுரையைச் சேர்ந்த சுசித்ராவின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘ஒளி’. தமிழிலும் ஆங்கிலத்திலுமாக எழுதிவரும் இவர், சங்கக் கவிதைகள் உட்பட சில மொழிபெயர்ப்புகளையும் செய்திருக்கிறார். இவையெல்லாம் இவருடைய கதைகளுக்குப் பலம் சேர்க்கின்றன. யதார்த்தம், மிகை யதார்த்தம், அறிவியல், தத்துவம் எனப் பல பொருண்மையிலான கதைகள் தொகுப்பில் உள்ளன. தொகுப்புக்கு ஒரு முகம் இல்லை. இது சுசித்ராவின் பலம். தலைப்புக் கதையான ‘ஒளி’, இணைய இதழில் வெளியானபோதே பரவலாகக் கவனம் பெற்றது; பலரையும் இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும், குழந்தைகளின் உலகமும், பெண்களின் உலகமும் பல கதைகளில் நுட்பமாகப் படிந்திருக்கின்றன. மொத்தத்தில், சுசித்ராவுக்கு இது நல்ல ஆரம்பம்.

- சுப்பிரமணி இரமேஷ்

------------------------------------------------------------------------------

இருப்பை விதைக்கும் சொற்கள்

சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
ஜீவன் பென்னி
வாசகசாலை பதிப்பகம்
ராஜ கீழ்ப்பாக்கம், சென்னை–73.
தொடர்புக்கு:
99426 33833
விலை: ரூ.110

சாதிய விஷம் நீர்த்துப்போகாது இன்னும் பரவலாகத் துளிர்விட்டபடியே இருக்கிறது. அந்த அடக்குமுறை ஒருபுறம் என்றால், பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் இன்னும் பல அடுக்குகள் கொண்டவை. அப்படியான துயர்தோய்ந்த காலத்தில் பாறைப் பிளவுகளில் தன் வேர் பரப்பி மரம் என நிமிர்ந்து தன் ஆளுமையை உலகுக்கு உணர்த்தும் பெண்களின் வாழ்வை இந்தக் கவிதை நூலில் அழகுணர்வோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் ஜீவன் பென்னி. அதன் வழியாக, நமக்கான பெண்ணின் உலகை உற்றுநோக்கச் செய்கிறார்.

- ந.பெரியசாமி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x