

நான் கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளாக எழுதியவற்றில் இன்றும் பயன்தருவனவென்று கருதுகின்ற கட்டுரைகளைத் தொகுத்து, பகுத்தபொழுது கிடைத்த கட்டுரைகள் இவை.
…பெரும்பாலான கட்டுரைகள் அண்ணல் காந்தியடிகளை மற்றைய மாமனிதர்களோடு இணைத்து எண்ணிப்பார்த்து எழுதியவை. இவை இந்த சிறப்பு மிக்கவர்களைப் புரிந்துகொள்ள முயன்றதால் எழுதியவை.
…இந்த ஒப்பிடுதல் யார் சிறந்தவர், உயர்ந்தவர் என்ற நோக்கில் எழுந்ததல்ல. வெவ்வேறு சூழல்களில் பிறந்து வாழ்ந்தவர்களிடம் எப்படி வியத்தகு ஒற்றுமைகள் இருக்கின்றன என்று அறியும் முயற்சியில் அவர்களை ஓரளவு நன்கு புரிந்துகொள்ள முடிந்தது என்பதே உண்மை. இந்த கட்டுரைகள் எல்லாம் அகன்ற ஆழ்ந்த ஆராய்ச்சியின் விளைவு அல்ல. இதில் ஒப்பிடப்பட்டிருப்பவர்கள் என்னைக் கவர்ந்தவர்கள். என்னுள் தடம் பதித்தவர்கள்.
ஒப்பற்ற மகாத்மாக்கள் - ஓர் ஒப்பீடு
டாக்டர் மா.பா. குருசாமி
வெளியீடு: காந்திய இலக்கியச் சங்கம்,
காந்தி நினைவு அருங்காட்சியக வளாகம்,
மதுரை- 625020
தொலைபேசி எண்: 0452- 2533957