Published : 12 Sep 2020 08:01 AM
Last Updated : 12 Sep 2020 08:01 AM

நூல்நோக்கு: கரோனா காலத்துக் கவிதைகள்

முன்னேறிய நாடுகள் முதல் மூன்றாம் உலக நாடுகள் வரை சவால்விட்டுக்கொண்டிருக்கும் கரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட நீளமான ஊரடங்கு நிலைமை மனித குலம் இதற்கு முன்னர் அனுபவித்திராதது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் உச்சத்தைத் தொட்ட நம் யுகத்தில் சமூக இடைவெளியையும், தனிமனித இடைவெளியையும், பயணங்கள் செல்வதற்கான தடையையும் அனுபவிக்கும் இந்தக் காலத்தைக் குறித்த 103 தமிழ்க் கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பு நூல் இது. ‘லாக்டவுன் லிரிக்ஸ்’ என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த நூலிலுள்ள கவிதைகளை மொழிபெயர்த்திருப்பவர் டாக்டர் கே.எஸ்.சுப்ரமணியன். இந்தப் பெருந்தொற்று சமூக உளவியலிலும் நெறிமுறைகளிலும் ஏற்படுத்திய மாற்றங்களை இந்தக் கவிதைகள் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. உரிய அவகாசம் தரப்படாமல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பெருமளவு பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் அவதிகள், ஆள்களற்ற ரயில் நிலையத்தில் அலையும் குரங்குகள், நாய்கள் வரை ஒரு வரலாற்றின் சாட்சிகளாக இந்தக் கவிதைகள் இருக்கின்றன.

லாக்டவுன் லிரிக்ஸ்
ஆங்கிலத்தில்: கே.எஸ்.சுப்ரமணியன்
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு
கே.கே.நகர் மேற்கு, சென்னை-78
தொடர்புக்கு: 87545 07070
விலை: ரூ.250

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x