Published : 05 Sep 2020 08:08 AM
Last Updated : 05 Sep 2020 08:08 AM

நூல்நோக்கு: கடித பாணியில் அரசியல்

தம்பிக்கு
வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்
காம்ரேடு பப்ளிகேஷன்ஸ்
தொடர்புக்கு: 99949 63534
விலை: ரூ.300

சமகால அரசியல் நடப்பைக் கூர்மையாகக் கவனித்து இன்றைய தலைமுறைக்கு எது சரி, எது தவறு என்று ‘தம்பிக்கு’ நூலின் மூலம் திட்டவட்டமாய் எடுத்துரைக்கிறார் சரவணகுமார். அறிஞர் அண்ணாவின் கடித வழி முறையைப் பின்பற்றி இன்றைய தலைமுறையினருக்கு, அரசியல் ஆகட்டும் அல்லது திராவிட இயக்கக் கொள்கை ஆகட்டும், சமகால அரசியலில் அவருடைய கண்ணோட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதாகட்டும் இவற்றையெல்லாம் மிக அழகாக இந்தப் புத்தகத்தில் பதிவுசெய்துள்ளார். முகப்பில் அண்ணா படமும், உள்ளிருக்கும் எழுத்துகள் அண்ணாவின் நடையில் ஒத்திருந்தாலும், இதனுடைய பேசுபொருள் சமகால நடப்புகளை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்வதாக இருக்கிறது. திராவிட இயக்கம் தந்த பங்களிப்புகளை, திராவிட முன்னோடிகள் இந்த மண்ணுக்கு அளித்த பங்களிப்புகளை, ஊட்டிய சுயமரியாதைச் சிந்தனையை, பகுத்தறிவை, சமூகநீதி சிந்தனையை இந்தத் தலைமுறை தொலைத்துவிடக் கூடாது எனும் ஆதங்கத்தோடு எழுதப்பட்ட நூல் இது.

- தமிழச்சி தங்கபாண்டியன்

**********************************************************************************

வானொலி நேயர்களே...

நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது
ந.அருண்குமார்
பாரதி புத்தகாலயம்
தேனாம்பேட்டை, சென்னை-18.
தொடர்புக்கு: 044-24332424
விலை: ரூ.20

பத்திரிகையாளர் ந.அருண்குமாரின் மாற்று ஊடக முயற்சிகளில் ஒன்றுதான் ‘வாய்ஸ் ஆஃப் சென்னை’ இணையதள வானொலி. அவர், வானொலி குறித்து நாளிதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்தக் கட்டுரைகள் இலங்கை வானொலி, பிபிசி தமிழோசை என்று வானொலி குறித்த நினைவேக்கங்களைப் பகிர்ந்துகொள்கின்றன; உலகளவில் பிரபல வானொலி நிலையங்கள் தங்களது சிற்றலை ஒலிபரப்புகளை நிறுத்திக்கொள்ளும் நேரத்தில் இந்தியாவிலும் தமிழகத்திலும் தனியார் பண்பலை அலைவரிசைகள் தொடங்கப்பட்டுவருவதைக் குறித்து மனநிறைவு கொள்கின்றன. வானொலி வளர்ச்சி கண்ட வரலாற்றை நினைவுகூர்கின்றன; அதன் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகின்றன. அதே நேரத்தில், வானொலி என்ற ஊடகம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.

- கவனகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x