Published : 15 Aug 2020 07:27 AM
Last Updated : 15 Aug 2020 07:27 AM

‘மார்மிக்’ இதழுக்கு வயது 60  

மஹாராஷ்டிரத்தின் செல்வாக்கு மிக்க அரசியல் கட்சியாக உருவாகிநிற்கும் ‘சிவ சேனை’க்கு ஆதார விதை ‘மார்மிக்’ இதழ்தான். 1960 ஆகஸ்ட் 13 அன்று தொடங்கப்பட்ட ‘மார்மிக்’ இதழுக்கு இப்போது வயது 60. ‘சிவ சேனை’யின் நிறுவனரும் கார்ட்டூனிஸ்ட்டுமான பால் தாக்கரேவால் தொடங்கப்பட்ட இந்த இதழ், வெளிமாநிலத்தவர்களால் நசுக்கப்படும் மராத்தியர்களின் குரலைப் பிரதிபலிக்கும் என்று பிரகடனப்படுத்திக்கொண்டது.

மராத்தியர்களின் ஏகோபித்த செல்வாக்கைப் பெற்றதன் விளைவாக, இதழ் வெளியாகி ஆறே வருடங்களில் ‘சிவ சேனை’ கட்சி உருவானது. 1989-ல் ‘சிவ சேனை’ கட்சியின் குரலை வெளிப்படுத்தும் விதமாக ‘சாம்னா’ எனும் தினசரி தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு ‘மார்மிக்’கின் தேவை குறையத் தொடங்கியது என்றாலும், பால் தாக்கரேயின் புகழுக்கான அடையாளமாக இன்று வரை ‘மார்மிக்’ இதழ் வந்துகொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x