நூல்நோக்கு: மனநெருக்கடிகளின் கதைகள்

நூல்நோக்கு: மனநெருக்கடிகளின் கதைகள்
Updated on
1 min read

உளவியல் சிக்கல்களை நுட்பமாகக் கையாளும் படைப்பாளிகளுள் ஒருவரான எம்.கோபாலகிருஷ்ணனின் புதிய குறுநாவல் தொகுப்பு இது. நான்கு குறுநாவல்கள். பிள்ளைகளுக்கு அம்மாவாகவும், கணவனுக்கு மனைவியாகவும் வாழ்க்கை நடத்தும் பெண் ஒருத்தி தன்னுடைய அடையாளத்தைக் கண்டுகொள்ளும் தருணங்களைப் பேசுகிறது ‘வால்வெள்ளி’; ஏற்கெனவே இந்தக் களம் பலமுறை கையாளப்பட்டிருந்தாலும் கவித்துவமான வரிகளும் நுட்பமான தருணங்களும் புதுமையான வாசிப்பைத் தருகின்றன. செய்யாத குற்றத்துக்காகக் காவல் துறையிடம் சிக்கிக்கொள்ளும் ஒருவர் எப்படியான மனநெருக்கடிக்கு உள்ளாகிறார் என்பதைச் சொல்கிறது ‘ஊதாநிற விரல்கள்’. நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முந்தைய காலகட்டத்தில் நடிகைகளைக் கொண்டாடும் ஒரு ரசிகனின் கதை ‘ரசிகன்’; இந்தக் குறுநாவல் ஒரு காலகட்டத்தின் ஆவணமாகவும் வாசகருக்கு நினைவேக்கத்தை உண்டாக்குவதாகவும் அமைந்திருக்கிறது. கலப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் நோய்வாய்ப்பட்ட பிள்ளையால் எதிர்கொள்ளும் மனநெருக்கடிதான் ‘துன்பக் கனி’ குறுநாவல்; மிகப் பெரும் துயரங்களை இந்தத் தம்பதி எதிர்கொள்ளும்போதும்கூட, கலப்புத் திருமணம் செய்துகொண்ட காரணத்துக்காக இருவருடைய பெற்றோரும் மனமிறங்க மறுக்கும் அவலத்தையும் இக்குறுநாவல் உட்பிரதியாகக் கொண்டிருக்கிறது.

வால்வெள்ளி
எம்.கோபாலகிருஷ்ணன்
தமிழினி வெளியீடு
சேலவாயல்,
சென்னை-51.
தொடர்புக்கு:
86672 55103
விலை: ரூ.130

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in