நம் வெளியீடு: புதிய கல்விக் கொள்கை புரிதல் வேண்டும்

நம் வெளியீடு: புதிய கல்விக் கொள்கை புரிதல் வேண்டும்
Updated on
1 min read

புதிய கல்விக் கொள்கை இன்றைய நாளின் மிக முக்கியமான விவாதமாகியிருக்கிறது. இது எதிர்காலச் சமூகத்தை நிர்ணயிக்கக் கூடியது என்ற வகையில் ஆழஅகலத் தெரிந்துகொள்வதும் ஆக்கபூர்வமாக உரையாடுவதும் அவசியமானது. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியின் இந்தப் புத்தகம் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை வெளியானபோது எழுதப்பட்டது. புதிய கல்விக் கொள்கை அறிக்கையின் அத்தனை பக்கங்களையும் ஒவ்வொருவரும் படித்தறிய இயலுமா என்றால், அது கேள்விக்குறிதான். அதனால்தான், இந்தப் புத்தகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இந்நூல் நம் சிந்தனையைத் தூண்டும் விதமாக எழுதப்பட்டிருக்கிறது. கூடவே, ஒவ்வொரு பெற்றோரும் கடனே என்று இருந்துவிடாமல் தங்களின் பொறுப்பையும் உணர வலியுறுத்துகிறது. ‘எதிர்காலத்தில் உறுதிமிக்க தேக்குமரமாக வளரத்தான் போகிறது என்பதற்காக, சின்னஞ்சிறிய கன்றாக இருக்கும்போது அதன் மீது நாம் சுமைகளை வைப்போமா? கனமான ஆணிகளை அறைவோமா? அப்படித்தான் இருக்கிறது இந்த கல்விக் கொள்கை’ என்று தனது கருத்தைத் தெளிவாக்கியிருக்கிறார்.

புதிய கல்விக் கொள்கை: நன்மையா? தீமையா?
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
இந்து தமிழ் திசை வெளியீடு
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
தொடர்புக்கு:
74012 96562
விலை: ரூ.90

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in