

தோரோ
(காந்தியின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர், அமெரிக்க எழுத்தாளரும் சிந்தனை யாளருமான தோரோ.)
நான் வரி செலுத்த மறுப்பது ஏன்? நான் இந்த அரசுடன் ஒத்துழைக்காமல் விலகி நிற்க விரும்புகிறேன். எனது ஒரு டாலர் எங்கே, எதற்காகப் போகிறது என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. அது மனிதனை வாங்கவோ, ஒரு துப்பாக்கி வாங்கவோ பயன்படலாம். அந்தத் துப்பாக்கி கொண்டு ஒரு மனிதனைச் சுட்டுக்கொன்றால் அது டாலரின் தவறா? என் விலகல் மூலம், அரசுடன் ஒரு மறைமுகப் போரைத் துவக்குகிறேன். என் வழியிலான இம்முரண்பாடும் போராட்டமும், அரசின் அனுகூலங்களை நாம் பயன்படுத்துவதைத் தவிரக்கவில்லை.
***
அரசு எனக்கும் பெரும் பொருட்டல்ல. மிகக் குறைவாகவே அதுபற்றிச்சிந்திக்க முடியும். நான் பெரும்பாலும் அரசின் கீழ் வாழ்வதில்லை. ஏன் இந்த உலகில்கூட வாழ்வதில்லை.ஒரு மனிதன் சிந்தனைச் சுதந்திரம், கற்பனைச் சுதந்திரம், ஆடம்பரமின்மையுடன் வாழ்வானானால், அவன் எல்லாம் பெற்றவனாவான். புத்தியற்ற ஆட்சியாளர்கள், உண்மையற்ற சீர்திருத்த வாதிகள் அவனைப் பாதிக்கும் வகையில் குறுக்கிட முடியாது.
நூல்: ஒத்துழையாமை
ஹென்றி டேவிட் தோரோ
தமிழாக்கம்: டாக்டர் ஜீவா
வெளியீடு: சர்வோதய இலக்கியப் பண்ணை
32/1, மேல வெளி வீதி
மதுரை- 625 001
தொலைபேசி: 0452-2341746
விலை: ரூ.25/-