

எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய இணையதளத்தில், ‘ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்’ என்ற தலைப்பில் ஒரு அநாமதேயக் கடிதத்தைப் பிரசுரித்திருந்தார்.
இடதுசாரி இயக்கங்கள் மீதும், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மீதும் அந்தக் கடிதம் கடும் விமர்சனத்தை வைத்திருக்கிறது. எவ்வித ஆதாரமும் உண்மையும் இல்லாத இந்தத் கடிதத்தின் வழியாக ஜெயமோகன் வன்மத்தை வெளிப்படுத்துகிறார் என்று கடுமையாக எதிர்வினையாற்றி, பொதுவெளிக்கு விவாதத்தைக் கொண்டுவந்தார் பா.செயப்பிரகாசம்.
ஜெயமோகனின் இந்தச் செயல் தமிழக அறிவிஜீவிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெயர் குறிப்பிடாமல் அவதூறுகள் நிரம்பிய கடிதத்தைப் பிரசுரித்திருப்பதற்கு ஜெயமோகனே பொறுப்பு என்றும், இந்தக் காரியத்தை அவர் எப்போதும் செய்துவருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கண்டித்து, தமிழகத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கண்டனக் கடித்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.