Published : 01 Jun 2020 11:53 AM
Last Updated : 01 Jun 2020 11:53 AM

கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருதுக்கான குறும்பட்டியல் அறிவிப்பு

இந்த ஆண்டு முதல் கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது ரூபாய் ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. விருதுக்கான குறும்பட்டியலையும் கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை சார்பில் சீனிவாசன் நடராஜன் வெளியிட்ட அறிவிப்பு:

''ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு தேர்வு முறைகளில் முறைப்படுத்தப்பட்டு விருதுக்கான கவிதைத் தொகுப்பைத் தேர்வு செய்து வருகிறோம்.

2020 ஆம் ஆண்டில், இரண்டு அடுக்கு தேர்வு முறையும், முதல் நிலையில், இருநபர் தேர்வுக் குழுவினையும் அமைத்து, தேர்வு முறை பின்பற்றப்பட்டது.

அறக்கட்டளைக்கு பரிந்துரையுடன் வரப்பெற்ற 56 கவிதைத் தொகுப்புகளை, அறக்கட்டளை முதல்நிலை தேர்வாளர்களுக்கு பரிந்துரைத்திருந்தது.

முதல்நிலை தேர்வாளர்கள் இருவரும் தனித்தனியே அனுப்பியிருந்த பட்டியலிலிருந்து, கீழ்க்காணும் கவிதைத் தொகுப்புகளை, 2020 ஆம் ஆண்டிற்கான கவிதை விருதுக்குத் தகுதி பெறும் குறும் பட்டியலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 'கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது 2020'க்கான இறுதித் தேர்விற்காக, இப்பட்டியலை இரண்டாம் நிலை தேர்வாளருக்கு, அறக்கட்டளை அனுப்பிவைக்கிறது.

2020 ஆம் ஆண்டுக்கான 'கவிஞர் ஆத்மாநாம் விருது'க்கான முதல் நிலை தேர்வாளர்களால் பரிந்துரைக்கப்பட குறும்பட்டியல்:

1. எனது மகள் கேள்வி கேட்டாள் – கற்பகம் யசோதர – வடலி பதிப்பகம்

2. அரோரா – சாகிப் கிரான் – புது எழுத்து பதிப்பகம்

3. சொல் வெளித் தவளைகள் – றாம் சந்தோஷ் – சொன்மை பதிப்பகம்

4. கரப்பானியம் – வே.நி.சூர்யா – சால்ட் பதிப்பகம்

5. யட்சியின் வனப்பாடல்கள் – மனுஷி – வாசக சாலை பதிப்பகம்

6. பிடிமண் – முத்துராச குமார் – சால்ட்–தன்னறம் பதிப்பகம்

7. வைன் என்பது குறியீடல்ல – தேவசீமா – தேநீர் பதிப்பகம்

இந்த ஆண்டிற்கான முதல் நிலை தேர்வாளர்களாகச் செயல்பட்டவர்களுக்கு நன்றி.

ஜூன் மாதம் இறுதிக்குள் விருதாளர், விருது பெறும் தொகுப்பு அறிவிக்கப்பட்டு, நவம்பர் மாதத்தில் விழா நடத்தப்படும்''.

இவ்வாறு சீனிவாசன் நடராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x