

நூலின் முக்கியத்துவம் என்ன?
இந்தியாவிலும் தமிழகத்திலும் மதவாதமும் சாதியம் சார்ந்த ஒடுக்குமுறைகளும், மோதல்களும் அதிகரித்துவரும் நிலையில் ‘பிள்ளையார் அரசியல்’ கட்டுரைகள் மதச்சார்பின்மையின் அவசியம் குறித்து சில தெளிவுகளைத் தரும். தமிழக வரலாற்றில் மதநல்லிணக்கத்தை முன்னிட்டு எழுந்த சமய இயக்கங்கள் பற்றிய கட்டுரைகளும் இந்த நூலில் உண்டு. மதம், கடவுள் மற்றும் சடங்குகள் எல்லாம் வெறும் மூடநம்பிக்கைகள் என்று புறம்தள்ளாமல் சமயத்துக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவை மார்க்சிய வழியில் ஆராயும் கட்டுரைகள் இவை.
நூலாசிரியர் குறித்து…
தமிழின் குறிப்பிடத் தகுந்த சமூக, பண்பாட்டு வரலாற்றாய்வாளர்களில் ஒருவர். இவரது ‘கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும்’, ‘தமிழகத்தில் அடிமை முறை’ போன்ற நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை. இந்திய, தமிழகப் பண்பாட்டுத் தளத்தில் சாதி, மதம், வழக்காறுகள் தொடர்பாகத் தொடர்ந்து ஆய்வுசெய்துவருபவர்.
குறிப்பிடத் தகுந்த கட்டுரைகள்
சமபந்தி- ஓர் எதிர்ப் பண்பாடு, துரோணாச்சாரியார் விருது மற்றும் தர்க்காக்களும் இந்து இசுலாமிய ஒற்றுமையும் போன்ற கட்டுரைகள் அவசியம் படிக்கப்பட வேண்டியவை.
- வினுபவித்ரா
பிள்ளையார் அரசியல்
மத அடிப்படைவாதம் பற்றிய கட்டுரைகள்
ஆ. சிவசுப்பிரமணியன்
பாவை பப்ளிகேஷன்ஸ்
142, ஜானி ஜான் கான் சாலை
ராயப்பேட்டை
சென்னை-14
தொலைபேசி: 044-28482441
விலை: ரூ. 140/