Published : 28 Mar 2020 08:22 AM
Last Updated : 28 Mar 2020 08:22 AM

கனவில் வந்த ஆண்டாள்

அரசியல், தத்துவம், நரம்பியல், கலாச்சார வரலாறு என்று என்னிடம் பேசும் எதையும் நான் படிப்பேன். கிராஃபிக் நாவல்கள், காமிக்ஸ் புத்தகங்கள், சமையல் புத்தகங்களைக்கூட விரும்பிப் படிப்பேன். எது சுவாரஸ்யமாக என்னை ஈர்க்கிறதோ அதையெல்லாம் படிப்பேன். உயர் இலக்கியம், தாழ்ந்த இலக்கியம் என்ற வேறுபாடு கிடையாது. ஒரேயொரு பொன்னான விதிதான் வைத்திருக்கிறேன். எவ்வளவு பரந்துபட்ட அளவில் வாசிக்க முடியுமோ அவ்வளவு வாசிப்பது என்பதுதான் அந்த விதி. அப்போதுதான் மனத்துக்குச் சௌகரியமான பிராந்தியத்திலேயே உலவுவதைத் தவிர்க்க முடியும். வேறு வேறு வகைமைகள், கலாச்சாரங்கள், ஒழுங்குகளுக்குள் உலவிப் பயணிப்பதையே விரும்புகிறேன்.

- எலிப் ஷஃபக், துருக்கி நாவலாசிரியர்.

கரோனா காலத்தில் வாசிப்பு

கரோனா வைரஸ் நம்மைத் தனிமையில் தள்ளியிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் அன்றாடத்தை ஒவ்வொரு விதமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். வாசகர்களோ புத்தங்களை நாடியிருக்கிறார்கள். அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர் குழுமம் இந்தத் தருணத்தில் இன்னும் ஒரு படி மேலே போயிருக்கிறது. அக்குழுமம் புத்தக விமர்சனப் போட்டியை அறிவித்திருக்கிறது. நீங்கள் வாசிக்கும் புத்தகத்தைப் பற்றி விமர்சனம் எழுதி kaanalshortstories@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏப்ரல் 13-ம் தேதி நள்ளிரவு வரை விமர்சனங்கள் அனுப்பலாம். ஒருவரே எத்தனை விமர்சனங்கள் வேண்டுமானாலும் எழுதலாம். வெல்பவர்களுக்குப் பரிசுகளும் காத்திருக்கின்றன. இந்தத் தனிமைக்கு வாசிப்பு ஒரு நல்ல துணைதான், இல்லையா?

கனவில் வந்த ஆண்டாள்

ஆண்டாளின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘தி குயின் ஆஃப் ஜேஸ்மின் கன்ட்ரி’ என்ற நாவலை வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் சரண்யா மணிவண்ணன். ஆண்டாள் எழுதிய காலத்தில் இருந்த அன்றாட வாழ்க்கையும் இந்த நாவலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் மன்னர் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபரின் ஆட்சிக் காலத்தில் கதை நடைபெறுகிறது. திருப்பாவை, நாச்சியார் திருமொழியில் உள்ள நிகழ்ச்சிகளை நெருக்கமாக இந்த நாவலில் தொடர்ந்துள்ளதாக சரண்யா மணிவண்ணன் கூறுகிறார். ‘ஹார்ப்பர் காலின்ஸ்’ பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவல் இவருக்கு ஐந்தாவது நாவலாகும். ஆண்டாள் கனவில் வந்ததைத் தொடர்ந்து சரண்யா இந்த நாவலை எழுதத் தொடங்கினாராம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x