Published : 21 Mar 2020 10:23 AM
Last Updated : 21 Mar 2020 10:23 AM

பிறமொழி நூலகம்: நேதாஜியின் அரசியல்

இந்திய விடுதலைப் போராட்டத்துக்குத் தனித்துவமாகப் பங்களித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அரசியல் வாழ்க்கையானது சச்சரவுகள் பலவற்றை உருவாக்கிய ஒன்று. இந்திய தேசிய ராணுவத்தின் மூலம் இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத்தர உயிர்த்தியாகம் செய்த எண்ணற்றவர்கள், அவர்தம் குடும்பங்களில் இன்றளவும் தன்னிகரற்ற ஒரு தலைவராக விளங்கிவருபவர் அவர். பிரிட்டிஷ் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட பிறகு இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகுந்த தீர்க்கதரிசனத்துடன் வரையறுத்த முதல் தேசியத் தலைவரும் அவரே.

மூத்த பத்திரிக்கையாளரும் வரலாற்று ஆய்வாளருமான சிதாங்க்ஷு தாஸ் எழுதியுள்ள இந்நூல், நேதாஜியின் அரசியல் வாழ்க்கை எப்படிப் படிப்படியாகப் பரிணமித்து உச்சத்தை எட்டியது என்பதைத் தெளிவாக விளக்குகிறது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக அவர் விளங்கியபோதும் நேதாஜி குறித்த எழுத்துகள் மிகச் சிலவே. அவற்றில் அவரது அரசியல் வரலாற்றைச் சிறப்புற எடுத்துரைக்கும் வகையில் இந்நூல் தனித்துவம் பெறுகிறது.

- வீ.பா.கணேசன்

சுபாஷ்: எ பொலிட்டிக்கல் பயாக்ரஃபி
சிதாங்க்ஷு தாஸ்
ரூபா பப்ளிகேஷன்ஸ், புதுடெல்லி-110002.
விலை: ரூ.595

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x