

பதிப்புத் துறையில் புதியவர்கள்
புருஷோத்தமன்- விற்பனையாளர், சர்வோதய இலக்கியப் பண்ணை.
இந்த ஆண்டு புத்தக விற்பனையாளர்களுக்கு மட்டுமல்ல; பதிப்பாளர்களுக்கும் மகிழ்ச்சியான ஆண்டு. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை புத்தக கண்காட்சிக்குத்தான் வரவேற்பு அதிகம். தற்போது புதிதாக நிறைய பேர் பதிப்புத்துறையில் கால் பதித்திருக்கிறார்கள். எனவே, இதுவரையில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு அரங்குகள் உயர்ந்திருக்கின்றன. விற்பனையும் அமோகமாக ஆரம்பித்திருக்கிறது.
தொல்லியல் நூல்கள் போதாது
கடங்கநேரியான் - வாசகர், இலக்கிய ஆர்வலர்.
இந்த ஆண்டு புதிதாக ஏராளமான புத்தகங்கள் வந்திருப்பது உற்சாகம் தருகிறது. அதேநேரத்தில், தொன்மம், தொல்லியல் சார்ந்த புத்தகங்களையும் அதிகம் எதிர்பார்க்கிறேன். தற்போது மதுரை அருகே கீழடியில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சி, இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், தற்கால அகழ்வாராய்ச்சி குறித்த புத்தகங்களும், அறிக்கைகளும் இங்கு இடம்பெறவில்லை. குறைந்தபட்சம் மத்திய மாநில அரசுகளின் தொல்லியல் துறை வெளியீடுகளையாவது காட்சிப்படுத்தியிருக்கலாம்.
ஒரு வாசகர்