

தமிழ்ச் சிற்றிதழ் மரபில் கவிதைக்காக வந்திருக்கும் புதிய சிற்றிதழ் ‘பொயட்ரி’. 1970-களில் வெளிவந்த ‘ழ’, ‘கவனம்’ போன்ற சிற்றிதழ்களை ஞாபகப்படுத்தும் வடிவம், எளிமை, அழகுணர்ச்சியுடன் வந்திருக்கிறது.
ஸ்ரீஷங்கர் ஆசிரியராகப் பொறுப்பேற்று, கொண்டு வந்திருக்கிறார். ஸ்ரீநேசன், குமார் அம்பாயிரம், பயணி உள்ளிட்டோரின் கவிதைகளும், கவிஞர்கள் கே.சச்சிதானந்தம், சாகிப்கிரானின் நேர்காணலும் இந்த இதழின் முக்கிய அம்சங்கள்.
பொயட்ரி
ஆசிரியர்: ஸ்ரீஷங்கர்
எஸ்.ஆலங்குளம், மதுரை-625 017
தொடர்புக்கு: 78716 78748
விலை: ரூ. 40