Last Updated : 25 Feb, 2020 06:47 AM

1  

Published : 25 Feb 2020 06:47 AM
Last Updated : 25 Feb 2020 06:47 AM

நாற்காலிக்காரர்

‘நாற்காலிக்காரர்’ நாடகத்தில் ஒரு காட்சி.

தமிழில் நவீன நாடக வடிவத்துக்கு உருவம் தந்த அமரர் ந.முத்துசாமி யின் ‘நாற்காலிக்காரர்’ நாடகம் சென்னை ஸ்பேசஸ் அரங்கில் சமீபத்தில் அரங்கேறியது. தியேட்டர் லேப் ஜெயராவ் சேவூரி இயக்கி இருந்தார். கூத்துப்பட்டறை வார்ப்பான அவர் தனது குருவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நாடகத்தை அரங்கேற்றுவதாக தெரிவித்தார்.

பாரம்பரிய கோலி விளையாட்டை ஆடும் ஒரு கோஷ்டி - வெளிநாட்டு சீட்டுக்கட்டை வைத்து விளையாடும் இன்னொரு கோஷ்டி இடையே வெடிக் கும் ‘வாழ்க, ஒழிக’ கோஷங்களும், அசம்பாவிதங்களும்தான் நாடகத்தின் மையம்.

யாரோ ஆட்டுவிக்கிறார்கள்.. நாம் ஆடுகிறோம்.. சுயபுத்தியோடுதான் செய்கிறோமா.. இதை செய்வதால் என்ன விளைவு ஏற்படும்.. என்று, நாடகம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கேள்விக்கு மேல் கேள்வி எழும் விதத்தில் நடக்கும் இரு கோஷ்டிகளின் நாற்காலி போட்டி, பார்வையாளர்களையும் நாடகத்தின் பங்கேற்பாளர் ஆக்குகிறது. எல்லாமே அரசியல் விளையாட்டு என்னும் படிமத்தையும் நம் மனத்தில் பிரம்மாண்டமாக எழுப்புகிறது.

‘‘சீட்டாட்டம் மூளைக்கு வேலை கொடுக்கிற ஆட்டம். சில்லரை வச்சு ஆடணும். சும்மா முன்னூத்தி நாலு, தொள்ளாயிரத்து நாலுன்னு ஆடுறதிலே அர்த்தமில்லே. இங்கே தோக்கறவன் முட்டாள். ஜெயிக்கிறவன் ஞானி. அவன் மூளை கிலோ கணக்கிலே காலிபிளவர் மாதிரி’’ என்பதுபோன்ற வசனங்கள், பார்வையாளர்களை நாடகத்துக்குள் எளிதாக ஈர்க்கின்றன. கயல்விழி, பிரேம் குமார், ஐஸ்வர்யா மதி, விஜய் உள்ளிட்ட கலைஞர்களின் நடிப்பு மிகையில்லாமல் இருந்தது.

தலைமை அல்லது அமைப்பு எதுவாக இருந்தாலும், அதன் தவறு களை சுட்டிக்காட்டவும், நம் எதிர்ப்பை பதிவு செய்யவும் நமக்கான இன் றைய தேவை அதுகுறித்த புரிதலே தவிர, புரட்சி அல்ல என்பதை சற்றே உரத்த குரலில் பதிவு செய்கிறது நாடகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x