நூல்நோக்கு

நூல்நோக்கு
Updated on
1 min read

தமிழகத் தடங்கள்
மணா
அந்திமழை
கீழ்க்கட்டளை,
சென்னை-20.
தொடர்புக்கு: 94432 24834
விலை: ரூ.300

ஒரு பத்திரிகையாளராகத் தமிழகம் முழுக்க மேற்கொண்ட பயணங்களின் வழியே கிடைத்த கள யதார்த்தங்களைக் கட்டுரையாக்கியிருக்கிறார் மணா. ஏற்கெனவே 40 கட்டுரைகளோடு வெளிவந்த புத்தகத்தின் விரிவாக்கப்பட்ட பதிப்பு இது. ‘சாம்பல் நத்தம்’ தொடங்கி ‘கீழடி’ வரை என 75 இடங்களின் தொகுப்பாகப் பதிவாகியிருக்கும் இந்தக் கட்டுரைகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்ட வரலாற்று சாட்சியங்களாக இருக்கின்றன.

விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்
ம.சிங்காரவேலர்
விடியல் பதிப்பகம்
உப்பிலிபாளையம், கோயம்புத்தூர்-641015.
தொடர்புக்கு: 94434 68758
விலை: ரூ.150

தென்னக ஆய்வு மையம் வெளியிட்ட ம.சிங்காரவேலரின் ‘சிந்தனைக் களஞ்சியம் தொகுதி -2’ நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளைக் கொண்டுவந்திருக்கிறது ‘விடியல்’ பதிப்பகம். மந்திரம், பில்லி சூனியம் என மக்களிடையே உலவிவந்த மூடநம்பிக்கைகளை இந்நூல் அறிவியலின் அடிப்படையில் மறுக்கிறது. இதனால், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் பேசுகிறது. வெவ்வேறு மதங்களுக்குள் நிலவும் இதுபோன்ற நம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டுகிறது.

வெல்ல நினைத்தால் வெல்லலாம்
அ.அமல்ராஜ்
விஜயா பதிப்பகம்
ராஜ வீதி,
கோயம்புத்தூர்-641 001.
தொடர்புக்கு: 0422-2382614
விலை: ரூ.300

மனம், எண்ணம், குணம், சொல், செயல், பழக்கம் என ஒருவரின் தனிப்பட்ட அம்சங்களின் வல்லமையைப் புரிந்துகொள்ளும் விதமாக எழுதப்பட்ட கட்டுரை இது. இதற்கான உதாரணங்களைத் தான் படித்த புத்தகங்களிலிருந்து, தான் சந்தித்த மனிதர்களிடமிருந்து கொடுத்திருக்கிறார் அ.அமல்ராஜ் ஐபிஎஸ். ‘காவல் துறையினருக்கு வெற்றி தரும் மேலாண்மைப் பண்புகள்’, ‘வெற்றியாளர்களின் வெற்றிப் படிகள்’ புத்தகங்களைத் தொடர்ந்து அடுத்ததாக வந்திருக்கும் புத்தகம் இது.

திறந்திடு சீஸேம்
முகில்
இந்து தமிழ் திசை வெளியீடு,
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
தொடர்புக்கு:
74012 96562
விலை: ரூ.150

அபூர்வமான விலை மதிப்பு மிக்க கற்கள், அரிய நூல்கள், அரசர்கள், செல்வந்தர்கள் புதைத்து வைத்த நாணயங்கள், ஆபரணங்கள் என்று ஏராளமான பொக்கிஷங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் முகில் தனக்கே உரிய சுவாரஸ்யமான, விறுவிறுப்பான நடையில் பொக்கிஷங்களின் வரலாற்றை எழுதியிருக்கிறார். ‘மாயாபஜார்’ இணைப்பிதழில் ‘பொக்கிஷங்களின் கதை’களாக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது.

நம் வெளியீடு

திறந்திடு சீஸேம்
முகில்
இந்து தமிழ் திசை வெளியீடு,
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
தொடர்புக்கு:
74012 96562
விலை: ரூ.150

அபூர்வமான விலை மதிப்பு மிக்க கற்கள், அரிய நூல்கள், அரசர்கள், செல்வந்தர்கள் புதைத்து வைத்த நாணயங்கள், ஆபரணங்கள் என்று ஏராளமான பொக்கிஷங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் முகில் தனக்கே உரிய சுவாரஸ்யமான, விறுவிறுப்பான நடையில் பொக்கிஷங்களின் வரலாற்றை எழுதியிருக்கிறார். ‘மாயாபஜார்’ இணைப்பிதழில் ‘பொக்கிஷங்களின் கதை’களாக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in