Published : 01 Feb 2020 09:30 AM
Last Updated : 01 Feb 2020 09:30 AM

புத்தகக் காட்சியும் பேஸ்புக் காட்சியும்

தொடக்கம் முதலாக, புத்தகங்களுக்கும் புத்தகக்காட்சிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துவரும் ‘இந்து தமிழ்’, ஏழாவது ஆண்டாக ‘சென்னை புத்தகக்காட்சி’க்கு அன்றாடம் ஒரு சிறப்புப் பக்கத்தை ஒதுக்கி செய்திகளை வெளியிட்டது. ஆயிரக்கணக்கான தலைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக வந்திருக்கும் புத்தகக்காட்சியில் வாசகர்கள் முக்கியமான புத்தகங்களை அடையாளம் காணும் வகையில், ‘கவனிக்க வேண்டிய புத்தக’ங்களை வரிசைப்படுத்தியும்வருகிறோம். கறாரான பார்வையோடு தொகுக்கப்படும் இந்தப் பட்டியல் வாசகர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை உண்டாக்குகிறது. ஒரு சின்ன பெட்டிச்செய்தி - பாராட்டாகச் சொல்லப்பட்ட ‘தாதா’ என்ற வார்த்தை உட்பட - எப்படியான எதிர்வினைகளை உண்டாக்குகிறது என்பதை அந்தச் செய்தியை ஒட்டி சில பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் பேஸ்புக்கில் விவாதித்ததன் வழி வாசகர்கள் பார்வைக்குத் தருகிறோம். இன்றைய தமிழ்ச் சூழலில் ஒரே விஷயம் எப்படியெல்லாம் புரிந்துகொள்ளவும் எதிர்கொள்ளவும் படுகிறது என்பதற்கு இது உதாரணம்!

மனுஷ்யபுத்திரன் (கவிஞர், உயிர்மை பதிப்பகர்):

நம்ம எப்படா நமக்கே தெரியாம தாதாவானோம்? யாரைக் கேட்டு அப்பாயின்ட் பண்ணீங்க? தாதாவா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? வாசகர் வட்டம், இலக்கிய வட்டம் என்று பத்து ஐம்பது பேரை வைச்சு மெயின்டைன் பண்ண, சிட்டியில அதுக்காக நாலு பிரியாணிக் கடைய லீஸுக்கு எடுத்து நடத்திப் பாருங்க... அப்போ தெரியும்... மனுஷைப் புதுப்பேட்டை தனுஷ் ஆக்காம விட மாட்டீங்களா? அப்புறம் இன்னொரு தகவல் விடுபட்டுவிட்டது. யார்கூடவோ நாகரிக எல்லை கடந்து மனுஷ் சண்டை போட்டானாம். புத்தகக் கண்காட்சி நடந்த சம்பவத்தில் இன்னொரு சம்பவமும் நடந்தது. சைக்கோ ஒருத்தன் சுவரேறி வீட்டிற்குள் நுழைந்து என் உள்ளாடையைத் திருட முயற்சித்தபோது அவனுக்கும் எனக்கும் நாகரிக எல்லை கடந்த வாய்த்தகராறு ஆகிவிட்டது. இந்த இலக்கியத் தகவலையும் அடுத்த முறை என்னைப் பற்றி எழுதும்போது சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

உமாமகேஷ்வரன் பன்னீர்செல்வம் (இளம் பத்திரிகையாளர்): ‘த்’ மிஸ்ஸிங்.

ரமேஷ்வைத்யா (மூத்த பத்திரிகையாளர்): அருமையாச் சொன்னீங்க!

ஜீவா சகாப்தன் (பத்திரிகையாளர்): அப்படி பார்த்தா நான் தாதாவைக் கூப்பிட்டு நிகழ்ச்சி பண்ணியிருக்கேன். கேள்வி கேட்டிருக்கிறேன். தாதா என்கிற உண்மை தெரியாமா இதையெல்லாம் செஞ்சிட்டேனே! அடுத்த முறை தாதாக்கிட்ட எச்சரிக்கையாக இருக்கணும்!

மனுஷ்யபுத்திரன் (கவிஞர், உயிர்மை பதிப்பகர்): இந்தப் புலிப்பாண்டி பயங்கரமானவன்தான். ஆனா, குழந்தைகளுக்கு இல்லை!
சுபா பிரகாசம் (வாசகி): காலையில படிச்சப்போ மேற்கொண்டு உங்ககூட நட்பு வெச்சுக்கலாமா வேணாமான்னு யோசிச்சேன். பயந்தேன். உண்மையைச் சொல்லுங்க, பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?

மனுஷ்யபுத்திரன்(கவிஞர், உயிர்மை பதிப்பகர்): ஆண்டனியா இருந்தேன். இப்ப மாணிக்கமா ஆட்டோ ஓட்றேன்!

கண்ணன் சுந்தரம் (காலச்சுவடு பதிப்பகர்)

பெருமாள் முருகனைத் திட்டமிட்டு பல ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்துவருகிறது ‘இந்து தமிழ்’. யாருக்கும் குறையாமலும் இதில் இருக்கும் சிலரைவிடவும் அதிகமாகவும் அவர் நூல்கள் விற்பனையாகின்றன.

காளிமுத்து சேகர் எஸ் (வாசகர்): நீங்கள் பெருமாள்முருகனுக்கு ஜால்ரா போடக் காரணம் என்ன ?

ராஜன் குறை கிருஷ்ணன் (அரசியல் விமர்சகர்): வெகுஜன வெளியில் இப்படி பிம்பங்களைக் கட்டமைப்பது எப்படியான மனோபாவங்களை உருவாக்கும் என்பதற்கு மேலே காளிமுத்து சேகர் கேள்வியே உதாரணம்.

காளிமுத்து சேகர் எஸ் (வாசகர்): அன்றைய ‘இந்து தமிழ்’ நாளிதழில் நான்கு எழுத்தாளர்களும் நல்ல எழுத்தாளர்களே. கண்ணன் குற்றம் சொல்வது சரியில்லை. பெருமாள்முருகன் சிறந்த படைப்பாளி என்பதிலும் சந்தேகமில்லை.

ராம் தங்கம் (எழுத்தாளர்): அதிகம் விற்ற புத்தகங்கள் பட்டியலில் ‘மாதொருபாகன்’ வரவே இல்லையே சார்!

கண்ணன் சுந்தரம் (காலச்சுவடு பதிப்பகர்): 2015 முதலாக வராமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

ராம் தங்கம் (எழுத்தாளர்): இந்த அதிகம் விற்ற புத்தகங்கள் பட்டியலை எப்படி மானிட்டர் செய்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

ஸ்டாலின் தி (வாசகர்): இது தாதாக்களின் பட்டியலாமே! இதில் பெருமாள்முருகனை ஏன் எதிர்பார்க்க வேண்டும்?

சாகுல் ஹமீது (வாசகர்): இந்த நான்கு பேரில் மூன்று பேரின் பெருவாரியான எழுத்துகள் வெறும் குப்பைதான்!

பெருமாள்முருகன் (எழுத்தாளர்): வாசகர் அன்பு நமக்குப் போதும்.

முஹம்மது சிராஜுதீன் (பாரதி புத்தகாலயம் ஊழியர்)

பெருமாள்முருகனைத் திட்டமிட்டு ‘இந்து தமிழ் திசை’ இருட்டடிப்பு செய்கிறது என்கிற கண்ணனின் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல; சில ஆண்டுகளாக ‘இந்து தமிழ் திசை’யின் நடுப்பக்கம் ‘காலச்சுவடு’ இணைப்பிதழாகத்தானே வெளிவந்துகொண்டிருக்கிறது!

பா.ராமமூர்த்தி (பல்துறை வித்தகர்): தாதா என்றால் என்ன அர்த்தம்? மற்றவர்களை பயமுறுத்தி, பீதியடையச்செய்து, வன்மம்செய்து, கலகத்தை உண்டுபண்ணுகிறவன்தான் தாதா! என்ன ஒரு தர்மசங்கடம் என்றால் இதில் எஸ்ராவையும் ஜெமோவையும் சாருவையும் (கவனிக்க: யாருக்கும் நான் வக்காலத்து வாங்கவில்லை) இணைத்துக்கொள்வது... அடப் பாவிகளே... இதில் விமலாதித்த மாமல்லனுக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் இடையே வார்த்தைத் தாக்குதல்... ரொம்ப அவசியம்? இதெல்லாம் தேவையா? மற்றவர்கள் எல்லாம் சோடைபோனவர்களா? சோம்பித் திரிகிறவர்களா? அங்கே இருப்பவர்கள் இதையெல்லாம் கவனிக்க மாட்டார்களா? ஒரு நான்காம் தரப் பத்திரிகை மாதிரி செய்தி போட்டால் எந்த விதத்தில் சரி?

ராமசாமி துரைப்பாண்டி (தமிழ் ஆய்வாளர்): மாதொருபாகன் எழுதிய பெருமாள்முருகனா?

இர.இரா.தமிழ்க்கனல் (மூத்த பத்திரிகையாளர்): இதை மீண்டும் வழிமொழிகிறேன். ‘இந்து தமிழ்’ இலக்கியப் பகுதிப் பொறுப்பாளருக்கு ‘காலச்சுவடு+’ என்கிறபடியாக மட்டும் இருக்கிற தொழில் திறனை மேலும் வளர்த்தெடுத்து, அனைத்துத் தரப்பு வாசகர்க்குமாகவும் தாம் பணியாற்ற வேண்டும் எனும் கடப்பாட்டை உணர்த்த வேண்டும்.

மனோண்மணி (புதுஎழுத்து பதிப்பகர்): இணைப்பிதழேதான்.

விமலாதித்த மாமல்லன் (எழுத்தாளர்)

இன்று அதிகாலை என்னை எழுப்பியதே ‘காமன்ஃபோக்ஸ்.இன்’ ஆரிஃப். வரிசையாக என்னுடைய புத்தகங்களின் பெயர் சொல்லி இது இதில் இவ்வளவு வேண்டும் என்று கேட்டார். ‘‪என்னடா இது இலக்கியத்துக்கு என்ன ஆயிற்று!’ என்று கண்ணைக் கசக்கியபடி பார்த்தால், ‘இந்து தமிழ்’ல நம்மளைப் பத்தி குறிப்பு!

இந்தா பார்ரா… “பெருமாள் முருகனைத் திட்டமிட்டுப் பல ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்கிறது ‘இந்து தமிழ்’னு சொல்லிட்டு, ‘காலச்சுவடு’ விளம்பரத் தட்டியில பதிப்பகத்தோட எல்லா எழுத்தாளர்களையும் தானே இருட்டடிப்பு செஞ்சிட்டாரு ‘காலச்சுவடு’ கண்ணன். அறச்சீற்றம்னா இப்படியில்ல இருக்கணும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x