Published : 25 Jan 2020 08:52 AM
Last Updated : 25 Jan 2020 08:52 AM

நூல்நோக்கு: இதயம் தொட்ட இலக்கியவாதிகள்

இது தமிழின் முக்கியமான ஆளுமைகளுடன் ‘விஜயா’ மு.வேலாயுதத்துக்கு இருக்கும் பழக்கத்தைச் சொல்லும் புத்தகம் என்றாலும்கூட, அந்த ஆளுமைகளைப் பற்றிய விமர்சனபூர்வமான பார்வையும் வெளிப்படுகிறது. முக்கியமாக, இது எழுத்தாளர்கள் என்பதோடு முடிந்துவிடவில்லை. சக்தி வை.கோவிந்தன் பற்றிப் பேசும்போது ராஜாஜி வருகிறார், ஜெயகாந்தன் பற்றிப் பேசும்போது அப்துல் கலாம் வருகிறார்.

இதயம் தொட்ட இலக்கியவாதிகள்
விஜயா மு.வேலாயுதம்
வானதி பதிப்பகம்
தி.நகர், சென்னை-17.
044-2434 2810
விலை: ரூ.175

முக்கியமான தமிழறிஞர்களுள் ஒருவரான செ.வை.சண்முகம் தனது தொல்காப்பிய இலக்கணக் கோட்பாட்டு வரிசையில் கொண்டுவந்திருக்கும் புதிய புத்தகம் இது. இந்த வரிசையில் இது 11-வது புத்தகம். தொல்காப்பியத்தில் உவமை, உவமைத் தோற்றம், நிலைக்களம், உவமக் கிளவி, உவம வகைகள், உவமப் போலி, கூற்றி, லீலாதிலகத்தில் உவமை என உவமை பற்றிய ஒரு முழுமையான பரிமாணத்தை இந்தப் புத்தகம் அளிக்கிறது.

பொருளிலக்கணக் கோட்பாடு உவமவியல் தொல்காப்பியம்
செ.வை.சண்முகம்
என்சிபிஹெச் வெளியீடு
அம்பத்தூர், சென்னை-98.
044 – 26251968
விலை: ரூ.240

‘திசை எட்டும்’ சுமார் ஆறு ஆண்டுகள் தொடராக வந்த பதிவுகள் இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன. பிற இந்திய மொழிகளிலிருந்து, ஆங்கிலத்திலிருந்து, பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்குப் பல தசாப்தங்களாக மொழிபெயர்த்துக்
கொண்டிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பாளர்களின் அனுபவங்கள், விரிவாக இந்தப் புத்தகத்தில் பதிவாகியிருக்கின்றன.

மொழியாக்கம் எனும் படைப்புக்கலை
க.பஞ்சாங்கம்
திசை எட்டும் வெளியீடு
மீனாட்சிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி-607302.
: 94430 43583
விலை: ரூ.250

பெண்ணியம் தொடர்பாகத் தொடர் உரையாடல்களை முன்னெடுத்துவரும் பேராசிரியர் இரா.பிரேமா, ‘உடைபடும் மௌனங்கள்’ என்ற தலைப்பில் ஒரு பெண்ணியத் தொகுப்பைக் கொண்டுவந்திருக்கிறார். கவிதா, செண்பகம் ராமசுவாமி,
ஆர்.சூடாமணி, வாஸந்தி தொடங்கி சமீபமாகக் கதை எழுதத் தொடங்கியிருக்கும் ஜா.தீபா வரை என முப்பது பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

உடைபடும் மௌனங்கள்
இரா.பிரேமா
பாரதி புத்தகாலயம்
தேனாம்பேட்டை, சென்னை-18.
044-24332424
விலை: ரூ.360

பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் வேதியியல் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் 35 ஆண்டுகள் பணியாற்றியவர் ஞானராஜ் பால். அவரது வாழ்க்கை அனுபவங்களை ‘வாழையடி வாழையாக’ என்ற தலைப்பில் சுயசரிதைப் புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார். வெளிநாட்டு மிஷனரிகளின் பணி, அவரது அரிமா இயக்க ஈடுபாடு, ஆளுமைகளுடனான சந்திப்பு என விரிகிறது இந்நூல்.

வாழையடி வாழையாக
ஞானராஜ் பால்
விநியோகம்: ஞான ரத்னா
கோட்டூர்புரம்,
சென்னை-85.
89397 16737
விலை: ரூ.200

மகப்பேறு மற்றும் பெண்கள் நலச் சிறப்பு மருத்துவரான சசித்ரா தாமோதரன், திருப்பாவை குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ஒரு மருத்துவரின் பார்வையில் விரியும் திருப்பாவை, பல புதிய வாசல்களைத் திறந்துவிடுகிறது. பாசுரங்களில் நாம் அறிந்திராத விஷயங்கள், தொலைநோக்குப் பார்வையுடன் இயற்றப்பட்ட பாடல்களில் கையாளப்பட்டிருக்கும் தமிழின் நுட்பங்கள் இந்தப் புத்தகத்தில் அழகுற எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றன.

மார்கழி உற்சவம்
சசித்ரா தாமோதரன்
சந்தியா பதிப்பகம்
அசோக் நகர்,
சென்னை-83.
044–24896979
விலை: ரூ.210

மகாபாரதத்தில் இருந்து அறுபது கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கிறார் நல்லி குப்புசாமி செட்டியார். ஒவ்வொரு கதைக்கும் ஒரு முகப்பு வாசகம், அந்தக் கதை போதிக்கும் அறத்தைச் சொல்லும் சிறு குறிப்பு, அதற்கு நிகரான திருக்குறள், அந்தத் திருக்குறளுக்கான உரை என்கிற பாணியில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது இந்நூல்.

வியாசர் அறம்
நல்லி குப்புசாமி செட்டியார்
ப்ரெய்ன் பேங்க்
தி.நகர், சென்னை-17.
98410 36446
விலை: ரூ.200

நம் வெளியீடு

புதிய கல்விக் கொள்கை
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
இந்து தமிழ் திசை வெளியீடு
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
74012 96562
விலை:ரூ.90

புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை பற்றிய புரிதலைத் தருவதையே இந்தப் புத்தகம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. ‘எதிர்காலத்தில் உறுதிமிக்க தேக்குமரமாக வளரத்தான் போகிறது என்பதற்காக, சின்னஞ்சிறு கன்றாக இருக்கும்போது அதன் மீது நாம் சுமைகளை வைப்போமா? கனமான ஆணிகளை அறைவோமா? அப்படித்தான் இருக்கிறது இந்த கல்விக் கொள்கை’ என்று தனது கருத்துகளைத் தெளிவாக்கியிருக்கிறார் நூலாசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x