Published : 20 Jan 2020 09:46 AM
Last Updated : 20 Jan 2020 09:46 AM

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

சுதந்திரத்தின் நிறம்
லாரா கோப்பா
தமிழில்: பி.ஆர்.மகாதேவன்
தன்னறம் வெளியீடு
விலை: ரூ.500

தமிழர் மானிடவியல்
பக்தவத்சல பாரதி
அடையாளம் வெளியீடு
விலை: ரூ.450

பீஃப் கவிதைகள்
பச்சோந்தி
நீலம் வெளியீடு
விலை: ரூ.150

பெண்கள் துகிலுரிந்தால்
பேரண்டம் அழியாதோ
அ.கா.பெருமாள்
என்சிபிஹெச் வெளியீடு
விலை: ரூ.135

ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு
தாஸ்தோயேவ்ஸ்கி
தமிழில்: சா.தேவதாஸ்
நூல்வனம் வெளியீடு
விலை: ரூ.700

பளிச்!

புத்தரும் அவரது தம்மமும்
பி.ஆர்.அம்பேத்கர்
கருத்து=பட்டறை வெளியீடு
விலை: ரூ.600
98422 65884

அம்பேத்கர் அவரது மரணத் தறுவாயில் எழுதிய புத்தகம். பௌத்தம் பற்றி எளிமையாகவும் விரிவாகவும் எழுதப்பட்ட புத்தகம். விவிலியத்தைப் போல அத்தியாயப் பிரிப்பும் வாக்கிய அமைப்பும் கொண்டு புத்தரையும் அவரது கருத்துகளையும் தொகுத்தளித்த புத்தகம். பௌத்த அமைப்புகளும், அம்பேத்கர் பவுண்டேஷனும் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுவருகின்றன. ‘கருத்து=பட்டறை’ கொண்டுவந்திருக்கும் இந்தப் பதிப்பு தரமான தாளில், ராயில் சைஸில், கெட்டி அட்டைப் பதிப்பாகக் கொண்டுவந்திருக்கிறது.

ஆஹா!

சிராப்பள்ளி மாவட்டக் கோயில் வரிசை நூல்கள்
மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்
மொத்த விலை: ரூ.1,300
0431-2740302

திருச்சிராப்பள்ளியை மையமாகக் கொண்டு இயங்கும் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பணிகள் முக்கியமானவை. சமீபத்தில், இந்த வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் அர.அகிலா, மு.நளினி, இரா.கலைக்கோவன் ஆகியோர் இணைந்து திருச்சிராப்பள்ளியின் முக்கியமான கோயில்களினுடைய வரலாற்றையும் கலைச் சிறப்புகளையும் கல்வெட்டுச் சான்றாதாரங்களோடு ஐந்து தொகுப்புகளாக வெளியிட்டுள்ளனர். அவை ‘சோளர் தளிகள் ஏழு’, ‘சோழர் தளிகள் நான்கு’, ‘எறும்பியூர் துடையூர் சோழர் தளிகள்’, ‘பாச்சிள் கோயில்கள்’, ‘தவத்துறையும் கற்குடியும்’. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியையும் மையப்படுத்தி இத்தகு ஆய்வு நூல்கள் வந்தால் எப்படி இருக்கும் என்ற பேராவலுக்கு வித்திடும் ஆவணம்.

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

டிராகன்: புதிய வல்லரசு சீனா
ஆழி செந்தில்நாதன்
ஆழி பதிப்பக வெளியீடு
விலை: ரூ.500
044-4860 0010

நம் வெளியீடு

அருளே ஆனந்தம்
பி.சுவாமிநாதன்
இந்து தமிழ் திசை வெளியீடு
விலை: ரூ.200
அரங்கு எண்: 133 & 134

மகா பெரியவரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களையும் அவரது அறநெறி உரைகளையும் சிந்தனைகளையும் ‘காமதேனு’ வார இதழில் பி.சுவாமிநாதன் தொடராக எழுதினார். அது இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. தொடரோடு இணைந்து வெளியான ஏ.பி.ஸ்ரீதரின் தத்ரூபமான ஓவியங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பும் இடம்பெற்றிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x