Published : 17 Jan 2020 10:09 AM
Last Updated : 17 Jan 2020 10:09 AM

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

வாய்மொழிக் கதைகள்
ஆ.சிவசுப்பிரமணியன்
என்சிபிஹெச் வெளியீடு
விலை: ரூ.145

எதிர்புரட்சியின் காலம்
ராஜன் குறை
உயிர்மை வெளியீடு
விலை: ரூ.425

அது இங்கே நடக்காது
சின்க்ளேர் லூயிஸ்
தமிழில்: கி.இலக்குவன்
பாரதி புத்தகாலயம் வெளியீடு
விலை: ரூ.440

கடல் ஒரு நீலச்சொல்
மாலதி மைத்ரி
அணங்கு பதிப்பகம்
விலை: ரூ.100

காலமற்ற வெளி
மருதன் பசுபதி
டிஸ்கவரி வெளியீடு
விலை: ரூ.250

ஆஹா!

நேசமணி தத்துவங்கள்
சுரேகா
வானவில் புத்தகாலயம்
விலை: ரூ.105
தொடர்புக்கு:
72000 50073

வைகைப்புயல் வடிவேலு பேசும் வசனங்களெல்லாம் சமூக வலைத்தளங்களில் மட்டுமல்ல, சமூகத்திலும்கூட இரண்டறக் கலந்துவிட்டன. வடிவேலுவின் வசனங்களை நம் அன்றாட வாழ்க்கையில் எங்கெல்லாம் பயன்படுத்துகிறோம், அதற்குள் பொதிருந்திருக்கும் அர்த்தங்கள் என்னென்ன என்று விவரிக்கிறார் சுரேகா. இப்படி ஒரு சிந்தனை அவருக்குத் தோன்றியதற்காகவே ஒரு சபாஷ் போட்டுவிடலாம்.

பளிச்!

அழகிய நதி & அழகிய மரம்
தரம்பால்
கிழக்குப் பதிப்பகம்
தமிழில்:
பி.ஆர்.மகாதேவன்
மொத்த விலை: ரூ.900
தொடர்புக்கு: 044-42009603

இந்தியாவின் மிக முக்கியமான காந்தியச் சிந்தனையாளர்களுள் ஒருவரான தரம்பாலின் இரண்டு புத்தகங்களை இப்போது கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 18-ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி என்னவாக இருந்தது என்பதை ‘அழகிய மரம்’ புத்தகமும், இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை ‘அழகிய நதி’ புத்தகமும் விரிவாக விவரிக்கின்றன.

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

அருங்கலைச்சொல் அகரமுதலி
(ஆங்கிலம்-தமிழ்)
முதன்மைப் பதிப்பாசிரியர்: ப.அருளி
விலை: ரூ.1,200
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு

புதுப்புதுக் கலைச்சொற்களின் உருவாக்கத்துக்குத் தமிழ் மொழி எப்படியெல்லாம் வளைந்துகொடுக்கிறது என்பதற்கு உதாரணம்தான் இந்தப் புத்தகம். ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளில் உருவாக்கப்பட்ட இந்த அகராதியில் 135 துறைகளுக்குரிய ஒரு லட்சத்து இரு பதினாயிரத்துக்கும் மேற்பட்ட கலைச்சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு சொல்லின் பொருளும் வரலாறும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

நம் வெளியீடு

புதிய வடிவில் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’
இந்து தமிழ் திசை வெளியீடு
விலை: ரூ.300

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணத்தின் ஊடாக திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, பல பதிப்புகள் கண்ட புத்தகம். இந்தப் புத்தகத்தை எளிதில் பாதுகாக்கும் வகையில் கெட்டி அட்டைப் பதிப்பாகக் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து கோரிவந்த வாசகர்களின் விருப்பம் இப்போது பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. 416 பக்கங்களில், டெமி சைஸில், கெட்டி அட்டைப் பதிப்பாக வெளியாகியிருக்கும் இந்நூல் இப்போது புத்தகக்காட்சியில் சூடாக விற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x