Published : 15 Jan 2020 08:24 AM
Last Updated : 15 Jan 2020 08:24 AM

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

என் குருநாதர் பாரதியார்
ரா.கனகலிங்கம்
தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு
விலை: ரூ.120

தண்டோராக்காரர்கள்
சு.தியடோர் பாஸ்கரன்
தமிழில்: அ.மங்கை
அகநி வெளியீடு
விலை: ரூ.220

ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன்...
ஸான்ட்ரா கால்னியடே
தமிழில்: அம்பை
காலச்சுவடு வெளியீடு
விலை: ரூ.390

சங்கீத வித்துவான்கள் சரித்திரம்
பதிப்பாசிரியர்: வே.சிவசுப்பிரமணியன், கோ.உத்திராடம்
உ.வே.சா. நூல்நிலையம்
விலை: ரூ.80

தமிழ் மண்ணே வணக்கம்
த.செ.ஞானவேல்
வம்சி வெளியீடு
விலை: ரூ.280

ஆஹா!

கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்
தொல்லியல் துறை வெளியீடு
விலை: ரூ.50

‘கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’ நூலைத் தமிழ்நாடு பாடல்நூல் நிறுவனத்தின் நிதி பெற்று தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. இந்த நூலின் விலை ரூ.50 மட்டுமே. எல்லோருக்கும் புரியும்வண்ணம் மிக எளிமையான நடையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், அரபு உள்ளிட்ட 24 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பளிச்!

தீர்ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்துகொள்ளல்
பிரணாய் ராய், தொராய்
ஆர்.சொபாரிவாலா
தமிழில்: ச.வின்சென்ட்
எதிர் வெளியீடு
விலை: ரூ.399
தொடர்புக்கு: 99425 11302

ஊடகவியலாளர், பொருளாதார வல்லுநர், பட்டயக் கணக்காளர், தேர்தல் முடிவுகளைக் கணிப்பவர் என்று பன்முக ஆளுமை கொண்ட பிரணாய் ராய், தொராய் ஆர்.சொபாரிவாலாவுடன் இணைந்து எழுதிய புத்தகம்
‘தி வெர்டிக்ட்: டிகோடிங் இண்டியா’ஸ் எலெக் ஷன்ஸ்’. 1952 தொடங்கி 2019 தேர்தல் வரையிலான வரலாற்றைப் பற்றிய விரிவான பகுப்பாய்வு நூல் இது. பல்வேறு தரப்பினரது கவனம் ஈர்த்த இப்புத்தகம் இப்போது தமிழில் வெளிவந்திருக்கிறது.

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

சமூக நீதிக்கான அறப்போர்
பி.எஸ்.கிருஷ்ணனுடன் உரையாடல்:
வே.வசந்தி தேவி
சவுத் விஷன் புக்ஸ் வெளியீடு
விலை: ரூ.350
தொடர்புக்கு: 94453 18520

தலித் மக்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளுக்காகப் போராடிய பி.எஸ்.கிருஷ்ணனுடன் இந்திய அரசின் முன்னாள் செயலாளரான வே.வசந்தி தேவி நிகழ்த்திய மிக நீண்ட உரையாடல் இது. 70 ஆண்டுகால வரலாற்றைப் பேசுவதோடு ஒடுக்கப்பட்டோர் மீள்வதற்கான மகத்தான சிந்தனைகளையும் முன்வைக்கும் முக்கியமான நூல்.

நம் வெளியீடு

நடைவழி நினைவுகள்
சி.மோகன்
இந்து தமிழ் திசை வெளியீடு
விலை: ரூ.175

அரங்கு எண்: 133 & 134

மோகன் தனது ஐம்பது ஆண்டுகால எழுத்து வாழ்க்கையில் சந்தித்த அபூர்வமான ஆளுமைகளைப் பற்றி எழுதிய தொடர் ‘நடைவழி நினைவுகள்’. தமிழின் முதன்மையான எழுத்தாளர்கள் 16 பேர் கலை சார்ந்த ஆளுமைகளாகவும், அவரவர்களுக்கே உரிய பிரத்யேகக் குணங்களோடும் இந்தப் புத்தகத்தில் வெளிப்பட்டுள்ளார்கள். ஒரு வாசகரோடு அந்த ஆளுமைகள் நெருங்கிக் கைகுலுக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் புத்தகம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x