Published : 14 Jan 2020 09:45 AM
Last Updated : 14 Jan 2020 09:45 AM

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

காஷ்மீர் என்ன நடக்குது அங்கே?
அ.மார்க்ஸ்
புலம் வெளியீடு
விலை: ரூ.240

மகாத்மா அய்யன்காளி
நிர்மால்யா
காலச்சுவடு வெளியீடு
விலை: ரூ.350

ஆண்டன் செக்காவ்: ஆகச் சிறந்த கதைகள்
தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்
தடாகம் வெளியீடு
விலை: ரூ.100

தொல்குடித் தழும்புகள்
செம்பேன் உஸ்மான்
தமிழில்: லிங்கராஜா வெங்கடேஷ்
கலப்பை வெளியீடு
விலை: ரூ.180

மெக்ஸிகோ
இளங்கோ
டிஸ்கவரி வெளியீடு
விலை: ரூ.200

அடடே!

அம்மை & பதுங்குகுழி நாட்கள்
பா.அகிலன்
பரிசல் வெளியீடு
விலை: ரூ.170
தொடர்புக்கு: 93828 53646

ஒரு பக்கத்தில் ‘அம்மை’ கவிதைத் தொகுப்பும், இன்னொரு பக்கம் திருப்பினால் ‘பதுங்குகுழி நாட்கள்’ கவிதைத் தொகுப்பும் என யாழ்ப்பாணக் கவிஞர் பா.அகிலனின் இரண்டு கவிதைப் பிரதிகளை ஒரே புத்தகமாகத் தலைகீழ் வடிவில் அச்சிட்டுக் கொண்டுவந்திருக்கிறது ‘பரிசல்’ பதிப்பகம். இரண்டு பிரதிகள், இரண்டு காலங்கள், இரண்டு அட்டைப்படங்கள், ஒரே புத்தகம்! இந்த வடிவமைப்பு உத்திக்காக ஒரு சபாஷ்!

ஆஹா!

ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்...
பசு.கவுதமன்
ரிவோல்ட் பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 98406 03499

கீழ்வெண்மணி படுகொலைச் சம்பவம் தொடர்பான விவாதங்களில் ஏகப்பட்ட திரிபுகளும் உண்டு. அந்தச் சம்பவத்தின் பின்னுள்ள உண்மையான கள நிலவரத்தை அப்பட்டமாக முன்வைக்கும் முக்கியமான நூல்களுள் ஒன்று பசு.கவுதமன் எழுதிய
‘ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்...’ நூல். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது.

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

பிரமிள் படைப்புகள்
(6 தொகுதிகள்)
லயம் - பிரமிள் அறக்கட்டளை வெளியீடு
மொத்த விலை: ரூ.3,400
தொடர்புக்கு: 94426 80619

படைப்பூக்கம், விமர்சனம் இரண்டிலும் தமிழில் உச்சம் தொட்ட மேதைகளுள் ஒருவர் பிரமிள். கவிதைகள், கதைகள், நாடகங்கள், விமர்சனக் கட்டுரைகள், பேட்டிகள், உரையாடல்கள், தமிழாக்கங்கள் என பிரமிளின் பங்களிப்புகள் முழுவதையும் ஆறு தொகுதிகளாகத் தொகுத்திருந்தார் கால சுப்ரமணியம். இலக்கிய வாசகர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய தொகுப்புகள் இவை.

நம் வெளியீடு

கேள்வி நேரம்
ஆதி வள்ளியப்பன்
இந்து தமிழ் திசை வெளியீடு
விலை: ரூ.110

அரங்கு எண்: 133 & 134

இது பொது அறிவுக் கேள்வி - பதில் புத்தகம் என்பதைத் தாண்டி, இந்தத் தகவல்களின் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான அம்சங்களும் பதில்களில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. வெறும் தகவல்களாக மட்டும் அல்லாமல், அறிவை விரிவாக்கிக்கொள்ளவும் இந்தப் புத்தகம் உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x