Published : 13 Jan 2020 10:17 AM
Last Updated : 13 Jan 2020 10:17 AM

அமோகம்..  அண்ணா!

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

பாலம்மாள்: முதல் பெண் இதழாசிரியர்
தொகுப்பாசிரியர்: கோ.ரகுபதி
தடாகம் வெளியீடு

செவஸ்தபோல் கதைகள்
லியோ டால்ஸ்டாய்
தமிழில்: நா.தர்மராஜன்
விடியல் வெளியீடு

குமரப்பாவிடம் கேட்போம்
தமிழில்: அமரந்த்தா
பரிசல் வெளியீடு

கல்விக் கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம்
இவான் இல்லிச்
தமிழில்: ச.வின்சென்ட்
எதிர் வெளியீடு

மேலைநோக்கில் தமிழ் நாவல்கள்
ப.மருதநாயகம்
எழிலினி பதிப்பகம்

பளிச்!- அமோகம்.. அண்ணா!

2020 சென்னை புத்தகக்காட்சியில் விற்பனையில் கலக்கும் புத்தகமாகியிருக்கிறது ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல். அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘இந்து தமிழ்’ நாளிதழின் வெளியீடான இந்நூல் சென்னையில் முதல் முறையாக இந்தப் புத்தகக்காட்சிக்குத்தான் வந்திருக்கிறது என்பதும், வந்த வேகத்தில் விற்பதால், எப்போதுமே விற்பனையில் தட்டுப்பாடோடு இருந்த நூல்
இது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல அண்ணா தொடர்பாக ஏராளமான புதிய நூல்களையும் இப்புத்தகக்காட்சியில் பார்க்க முடிந்தது.

ஆஹா!

தாண்டவராயன் கதை
பா.வெங்கடேசன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.1,390

தமிழ் நவீன இலக்கியத்தின் சாதனைப் படைப்புகளுள் ஒன்றான பா.வெங்கடேசன் எழுதிய ‘தாண்டவராயன் கதை’ நாவல் இப்போது 12 ஆண்டுகள் கழித்து மறுபதிப்பு கண்டிருக்கிறது. அடர்த்தியான மொழி, அசாத்தியமான கற்பனை என வாசகரை மிகப் பெரும் கதைப்பரப்புக்குள் இழுத்துச்செல்லும் நாவல்.

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

தமிழக வரலாறு
மக்களும் பண்பாடும்
கே.கே.பிள்ளை
உலகத் தமிழாராய்ச்சி
நிறுவன வெளியீடு
விலை ரூ.275

கால வரிசையின் அடிப்படையில் தமிழகத்தின் சமூகப் பண்பாட்டு வரலாற்றை விவரிக்கும் நூல். தமிழக வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்களில் தொடங்கி, 20-ம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றை இருபது அத்தியாயங்களில் விளக்குகிறது. தமிழ் இலக்கிய மாணவர்களும் வரலாற்று மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1972-ல் இந்நூலின் முதல் பதிப்பை வெளியிட்டது. நூலின் முக்கியத்துவம் கருதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.

நம் வெளியீடு

மூலிகையே மருந்து
வி.விக்ரம்குமார்
விலை: ரூ.150
இந்து தமிழ் திசை வெளியீடு

எளிய மருந்துகள், கை மருந்துகள் மூலம் நோய்களுக்குத் தீர்வு கண்டுவருவது நாம் காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் நடைமுறைதான். நம் வீட்டருகே மிகச் சாதாரணமாக வளரக்கூடிய கீழாநெல்லி, மஞ்சள் காமாலைக்குக் கைகண்ட மருந்து. நம் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பலதும் மருத்துவ குணம் கொண்டவை. இதுபோன்ற 50 மூலிகைகளின் மருத்துவ குணங்களையும் பயன்களையும் இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x