Published : 12 Jan 2020 10:01 AM
Last Updated : 12 Jan 2020 10:01 AM

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

மொழி எங்கள் உயிருக்கு நேர்
ஆழி செந்தில்நாதன்
ஆழி பதிப்பகம்

அபராதிகளின் காலம்
ரவிக்குமார்
மணற்கேணி வெளியீடு

தமிழகத் தடங்கள்
மணா
அந்திமழை வெளியீடு

நலம் காக்கும் உணவுக் களஞ்சியம்
டாக்டர் கு.கணேசன்
காவ்யா பதிப்பகம்

கூண்டுக்குள் பெண்கள்
விலாஸ் சாரங்
தமிழில்: ஆனந்த் ஸ்ரீனிவாசன்
நற்றிணை பதிப்பகம்

ஆஹா

சுருக்கமான
தென் இந்திய வரலாறு
பிரச்சினைகளும் விளக்கங்களும்
தொகுப்பு: நொபோரு கராஷிமா
தமிழில்: ப.சண்முகம்
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்
விலை: ரூ.700

தென்னிந்திய வரலாற்றைக் கல்வெட்டு ஆதாரங்களின் துணையோடு ஆய்வுக்குட்
படுத்தியவர் நொபோரு கராஷிமா. தமிழக வரலாற்று அறிஞர்களின் பங்களிப்போடு அவர் தொகுத்த ‘தென் இந்திய வரலாறு’ இருபதாம் நூற்றாண்டு வரையிலான தமிழக வரலாற்றை நவீன ஆய்வுக் கண்ணோட்டத்தோடு விரிவாகப் பேசும் நூல். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாற்று நூல் விஜயநகரப் பேரரசின் காலத்துடனே நிறைவுபெற்றுவிடுகிறது. சாஸ்திரிக்குப் பிறகு கிடைத்த வரலாற்று ஆதாரங்களையும் ஒப்புநோக்கி எழுதியிருப்பது நொபோரு கராஷிமாவின் புத்தகத்தின் தனிச்சிறப்பு.

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

குறுந்தொகை மூலமும் உரையும்
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
விலை: ரூ.500
உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு

தமிழர்கள் பண்பாட்டின் முக்கியமான விளைச்சல் குறுந்தொகை. அந்த நூலை 1937-ல் உ.வே.சாமி நாதையர் பதிப்பித்தார். அதற்கான காலத்துக்கேற்ற செம்பதிப்பை சமீபத்தில் உ.வே.சா. நூல் நிலையம் கொண்டுவந்திருக்கிறது. காதலைப் பாடும் சங்கப் பாடல்கள் ஊடாக, தமிழரின் வாழ்க்கை முறையையும் இந்த நூலில் உணர முடிகிறது. குறிப்பாக, இலக்கியத்தோடும் வாழ்க்கையோடும் இயற்கை எந்த அளவுக்கு ஊடாடுகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

நம் வெளியீடு

காயமே
இது மெய்யடா
போப்பு
விலை: ரூ.160
இந்து தமிழ் திசை வெளியீடு

அரங்கு எண்:
133 & 134

நம் உடலின் முதன்மை உள் உறுப்புகளான கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகள், அவற்றைப் புரிந்துகொள்வது எப்படி, மேம்பட்ட வகையில் பராமரிப்பது எப்படி என்று இப்புத்தகம் விரிவாக விளக்குகிறது. காயம் என்பது ஒன்றுமற்றதல்ல; ஊனும் உயிரும் சேர்ந்த உடம்பு. அதை முறையாக வளர்க்கவும் பராமரிக்கவும் தேவைப்படும் வழிகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x