Published : 11 Jan 2020 10:05 AM
Last Updated : 11 Jan 2020 10:05 AM

கவனிக்க வேண்டிய ஐந்து புத்தகங்கள்

கவனிக்க வேண்டிய ஐந்து புத்தகங்கள்

தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை
ஜெ.ஜெயரஞ்சன்
மின்னம்பலம் வெளியீடு

இராஜேந்திர சோழன்
குடவாயில் பாலசுப்பிரமணியன்
அன்னம் வெளியீடு

குதிப்பி
ம.காமுத்துரை
டிஸ்கவரி வெளியீடு

சுழலும் சக்கரங்கள்
ரியெனொசுகே அகுதாகவா
தமிழில்: கணேஷ்ராம்
நூல்வனம் வெளியீடு

ஒளி வித்தகர்கள்
தமிழில்: ஜா.தீபா
யாவரும் வெளியீடு

ஆஹா

கதைக் கோவை
(5 தொகுதிகள்)
அல்லயன்ஸ்
கம்பெனி வெளியீடு
மொத்த விலை: ரூ. 2,600

நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட பதிப்பகமான அல்லயன்ஸ் கம்பெனி, 1942 தொடங்கி 1946 வரைக்கும் ‘கதைக் கோவை’ என்ற பெயரில் சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுவந்தது. பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டு, பரிசீலனைக்கு வந்த கதைகளைச் சிறந்த எழுத்தாளர்களைக் கொண்டு தேர்ந்தெடுத்து இத்தொகுதிகள் வெளிவந்தன. நான்கு தொகுதிகள் வெளிவந்து, ஐந்தாவது தொகுதிக்குக் கதைகள் பெறப்பட்டிருந்த நிலையில், அல்லயன்ஸ் நிறுவனர் வி.குப்புஸ்வாமி ஐயரின் மரணத்தால் அதன் வெளியீடு நின்றுபோனது. 117 கதைகள் அடங்கிய ஐந்தாவது தொகுப்பையும், 14 நெடுங்கதைகள் கொண்ட நெடுங்கதைக் கோவையையும் உள்ளடக்கியதாக ‘கதைக் கோவை’யை மீண்டும் பதிப்பித்துள்ளார் அல்லயன்ஸ் ஸ்ரீநிவாஸன். நாற்பதுகளில் எழுதப்பட்ட 356 கதைகளின் பெருந்தொகுப்பு இது. கதைகளின் வழியே கால இயந்திரத்தில் பயணிக்கும் அனுபவம்.

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

வியத்தகு இந்தியா
ஏ.எல். பசாம்
தமிழில்:
செ. வேலாயுதபிள்ளை, மகேசுவரி பாலகிருட்டிணன்
விடியல் வெளியீடு
விலை: ரூ. 900

இந்தியவியல் அறிஞரான ஏ.எல்.பசாம் எழுதிய இந்த நூல் இந்திய வரலாற்றின் மேல் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டியது. இந்தியாவின் வரலாறு, சிற்பக் கலை, இலக்கியம் போன்றவற்றைப் பற்றி எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் தமிழுக்கும் சிறப்பானதொரு இடம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசின் கல்வித் துறை வெளியிட்ட மொழிபெயர்ப்பை இந்தியாவில் விடியல் பிரசுரம் வெளியிட்டிருக்கிறது.

நம் வெளியீடு

கற்பிதம் அல்ல பெருமிதம்
மா
விலை: ரூ.200
இந்து தமிழ் திசை வெளியீடு

அரங்கு எண்: 133 & 134

ஆண்டாண்டு காலமாகப் பெண்கள் மீது சுமத்தப்பட்டுவரும் சுமைகளை எப்போது இறக்கிவைக்கப்போகிறோம் என்ற கேள்வியைத்தான் இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையும் எழுப்புகிறது. வயது வேறுபாடின்றி பெண்கள் பல்வேறு விதமான கொடுமைகளுக்கும் வன்முறைகளுக்கும் புறக்கணிப்புகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். இந்தச் சூழலை எதிர்கொள்வதற்கான சாத்தியங்களை இப்புத்தகம் உருவாக்கிக்கொடுக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x